Thursday, January 28, 2010

[அன்புடன்] ஜனாதிபதித் தேர்தல் 2010 முடிவுகள்




 
 
கடந்த 26-01-2010 அன்று இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்று இரண்டாவது பதவிக்காலத்துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை ஜனாதிபதி ராஜபக்ஷ பெற்றிருக்கிறார். பிரதான போட்டியாளரான எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்துள்ளன.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 57.88 சதவீதமான வாக்குகள் ராஜபக்ஷவுக்கும் 40.15 சதவீதமான வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கும் கிடைத்துள்ளன. புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றிபெற்றதைத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷ பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். ஆயினும் வடக்கு, கிழக்கில் 6 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கிடைத்திருக்கிறது.தென்னிலங்கையின் பெரும்பாலான தொகுதிகளில் அதிக தொகை வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கும் அதேசமயம் தலைநகர் கொழும்பில் உள்ள தேர்தல் தொகுதிகளில் ஜெனரல் பொன்சேகா அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் எதிரணி வேட்பாளரான பொன்சேகாவுக்கே அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.நாடளாவிய ரீதியில் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள், தேர்தல் தொகுதிகளில் எதிரணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.அதேசமயம், எதிரணி வேட்பாளர் பொன்சேகாவின் சொந்த இடமான அம்பலாங்கொடையில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ஷவுக்கு 6 இலட்சத்து 14 ஆயிரத்து 740 வாக்குகளும் சரத் பொன்சேகாவுக்கு 5 இலட்சத்து 33 ஆயிரத்து 22 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஆகவே இலங்கையில் இன்னும் ஆறு வருட காலங்களுக்கு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக இருப்பார்.




--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk


--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment