Saturday, January 30, 2010

[தமிழமுதம்] ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

http://tamizhanban.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

தற்செயலாக படிக்க நேரிட்டது...

ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

ஜனவரி 27, 2010

ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானதே!


ஜெயமோகன் குறித்து நான் சொல்வதற்கு முன்பே பலருக்கு அவரது எழுத்தின் தரம் என்னவென்று தெரிந்திருக்கும். சமீபத்தில் ஓர்குட் விவாதத்தில் வைக்கம் குறித்த ஜெயமோகனின் உளறல்களுக்கு பதில் அளிக்கவேண்டியதன் பொருட்டு ஜெயமோகனின் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.  வைக்கம் போராட்டம் குறித்து நாம் இதுவரை கேள்விப்பட்டிராத கோணத்தில் தனது கற்பனை தட்டிவிட்டதோடு பெரியார் மீதான தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வைக்கம் போராட்டம் குறித்து எழுதிய காந்தி பெரியார் என்ற மனிதரே இல்லாமல் பார்த்துக்கொண்டார் இப்பொழுது தன்னை காந்தியின் பக்தர் என்று காட்டிக்கொள்ள முயலும் ஜெயமோகனோ பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தில் பெரிதாய் பங்கில்லை என்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயல்கிறார்.  பொதுவாக தாழ்ந்தசாதி என்று அழைக்க கூடாது தாழ்த்தப்பட்டசாதி என்று அழைக்கவேண்டும் என்று காலம்காலமாக கூறப்பட்டு வந்தாலும் ஈழவர்களை தாழ்ந்தசாதி என்று கட்டுரையின் பல இடங்களில் எழுதி தனது வன்மத்தையும் தான் யார் என்பதையும் நமக்கு விளக்கி இருக்கிறார்.

அதாவது ஜெயமோகன் எப்போது பதிவு போட்டாலும் நேரடியாக அந்தப்பிரச்சனைக்குள் போகாமல் சுத்தி வளைத்து அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா பெரியார் எப்படி தெரியுமா? என்றெல்லாம் அவரை பின்பற்றும் ஆட்டுமந்தைகளை சுற்றவிட்டு பின்னால் மெதுவாக பூனையை வெளியே எடுப்பார்.

அன்று நிறையப்பேர் போராடினார்கள் பலபேர் சிறைசென்றார்கள் அப்படி சிறை சென்றவர்களில் பெரியார் தனது மனைவியோடு கைதானார்அவ்வளவுதான் பெரியாரின் வைக்கம் போராட்டத்தில் பங்கு அப்பொழுது அவருக்கு வயது வெறும் 45 தான் அப்போது அவர் அவ்வளவு பிரபலம் இல்லை பின்னாளில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து செல்வாக்கு பெற்றார் அப்படின்னு தனது வழமையான அரைவேக்காட்டுத்தனத்தை முன்வைத்தால் உடனே அவரது வாசகர்களான செம்மறியாடுகள் தே'மே' என்று பின்னால் செல்லும்.

பெரியார் தனது மனைவியோடு போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானாராம். இதைவிட இந்த ஜெயமோகனை நாம் எப்படி அம்பலப்படுத்துவது?. பெரியார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து எழுச்சிகுறையாமல் நடத்தினார்கள்  என்பது வரலாற்று உண்மை.

வைக்கம் வீரர் என்று பெரியார் தன்னைத்தானே அழைத்து கொண்டது போலே ஜெயமோகன் ரெம்பவும் கவலை கொண்டிருக்கிறார். வைக்கம்வீரர் என்று திருவிக அவர்கள் பெரியாருக்கு பட்டம் வழங்கியதும் ஆனால் பெரியார் எப்பொழுதும் தன்னை வைக்கம்வீரர் என்று அழைத்து கொண்டதில்லை என்பதையும் நாம் இங்கே காணவேண்டும்.வெறும் கடிதத்தின் மூலம் மட்டுமே ஆதரவு வழங்கிய காந்தியை முன்னிறுத்தி. நேரடியாக களத்தில் இறங்கி போராடி சிறைசென்று தனது குடும்ப பெண்களை போராட்டத்தில் ஈடுபடும்படி செய்த பெரியாரைவிட சூத்திரர் போலே பஞ்சமரும் கோவிலுக்குள் செல்லலாம் என்று அறிக்கைவிட்ட காந்தியை முன்னிறுத்துவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று சிந்தியுங்கள்.

வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியார் கேரளா சென்றபொழுது மன்னர் பெரியாரை வரவேற்று அரசு விருந்தினாராக அழைத்த பொழுது தான் போராட வந்திருப்பதால் தன்னால் விருந்தினராக இருக்க முடியாது என்று பெரியார் தெரிவித்ததோடு தீண்டாமைக்கு எதிராக போராடி சிறை சென்றார் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஜெயமோகனின் லூசுத்தனத்தில் உச்சகட்டம் என்னவென்றால் வைக்கம் வீரர் பெரியார் என்றால் கேரளாவில் சிரிக்கிறார்களாம். உங்களை எழுத்தாளர் என்றால் கேரளாவில்  என்ன செய்கிறார்கள் நீங்கள்தான் சொல்லவேண்டும். 1965 பெரியார் கேரளாவிற்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார் என்பது ஜெயமோகனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

காந்தி பற்றி நம்மிடம் பல விமர்சனங்கள் உள்ளன ஆனால் காந்தியை பெரியாரோடு ஒப்பிட்டு பெரியார் எல்லாம் ஒண்ணுமில்லை தெரியுமா காந்திதான் பெரியாளு தெரியுமா என்கிறார். காந்தி வரலாற்று நாயகன் அந்த வரலாற்று நாயகன் வாழ்ந்த காலத்தில் பலகுரல்கள் எழுந்தன அப்படி எழுந்த குரல்களில் ஒன்று பெரியார் அவ்வளவே அவர் ஒன்றும் மாபெரும் மக்கள் தலைவர் அல்ல என்பதே ஜெயமோகனின் கருத்தாக்கம். பெரியார் ஒற்றை குரலாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இருந்தார்.புரட்சி என்பது எல்லாவற்றையும் புரட்டி போடுவது. மனிதனுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவையும் போதிப்பது. பெரியார் தான்வாழும் காலம் முழுவதும் புரட்சியாளனாக இருந்தார். சாதியின் பெயரால் கட்டமைக்கப்படும் தீண்டாமையை எதிர்த்தார். சாதி ஒழியவேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து போராடிய தலைவர் பெரியார். காந்தியார் வர்ணாசிரம கொள்கைகளை ஆதரித்தார். ஒருவன் தனது குலத்தொழில் செய்வதன் பொருட்டு மேன்மை அடையலாம் என்றார் காந்தி அது தவறு என்று பெரியார் தொடர்ந்து முழங்கினார்.

மேலும் காந்தியை எதிர்த்த பெரியார் காந்தி கொல்லப்பட்ட பொழுது இந்த தேசத்தை காந்திதேசம் என்று அறிவியுங்கள் என்றார் இதன் மூலம் பெரியார் கொள்கைகளில் உறுதியில்லாத மனிதர் என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் மேதாவித்தனம் இப்படி இருக்கிறது காந்தி தன்வாழ் முழுவதும் பார்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் ஒருவேளை காந்தி அதைமீறினால் கொல்லப்படுவார் என்று பெரியார் சுட்டிக்காட்டி வந்தார். பார்பனர்களாலேயே  காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபொழுது கொலை செய்த பார்பனர்களை தண்டிக்கும் விதமாகவே இந்த தேசத்தின் பெயரை காந்தியதேசம் என்று வையுங்கள் அப்பொழுதாவது பார்பனர்கள் விதைத்த சாதியை ஒழியுங்கள் என்கிறார் பெரியார். பின்னாளில் ராஜாஜி  , "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று மதுரையில் பேசியதை கண்டு சாதியை ஒழிக்காவிட்டால் காந்தி படத்தை எரிப்போம் என்கிறார்.  காந்தின் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறாய் அந்த காந்தியின் படத்தை எரிப்பது கண்டாவது சொரணை வந்து சாதியை ஒழிக்க வழியைப்பார் என்கிறார்.

பெரியாரின் நோக்கம் யார் மகாத்மா அல்லது யாரை மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள் என்று வெங்காயம் உரிப்பதில்லை. பெரியாரின் நோக்கம் சாதி ஒழியவேண்டும். ஏற்றத்தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பதே என்பதை ஜெயமோகன் போன்ற இலக்கிய புண்ணாக்குகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  இப்படியாக ஜெயமோகன் ஏதோவொரு இலக்கு நோக்கி எழுதிகொண்டிருக்கிறார். இவரை பின்பற்றும் செம்மறியாட்டு கூட்டத்திற்கு இவர்காட்டும் வழி கசாப்புகடையில் சென்று முடிவடையும் என்று தெரிவதில்லை.

பழைய தமிழ் திரைப்படங்களில் லூசுமோகன் என்ற நகைச்சுவை நடிகரை பார்த்திருப்பீர்கள். கண்களை சிமிட்டி கொண்டு குடிகாரர் போன்று சென்னை மொழியோடும் வித்தியாசமான உடல்மொழியோடும் நடித்து சிரிப்பு மூட்டுவார்(அவரை ஏன் லூசுமோகன் என்று அழைக்கிறார்கள் என்று தெளிவாக தெரியவில்லை). குப்பத்து மொழியை அருமையாக உச்சரிப்பார் பாதி வசனம் போசிமுடிப்பதற்குள் மயங்கி சரிந்து விடுபவராக வருவார். பிறரை பேமானி கஸ்மாலம் என்று திட்டுவார் தற்போதைய நகைச்சுவைநடிகர்கள் போன்று "சண்டாளா!" என்ற சாதி வன்மம் நிறைந்த சொற்களை லூசுமோகன் பேசியதாக நியாபகமில்லை.  தனக்கென தனியான நகைச்சுவையோட்டமோ, கதையில் லூசுமோகனுக்கென்று தனிமுக்கியத்துவமோ கொடுக்கப்படாவிட்டாலும். அவரது நகைச்சுவைக்காட்சிகள் பார்பவர்கள் சில நிமிடங்கள் சிரிக்க வைப்போதொடு முடிந்து விடுகிறது.  இவரது நகைச்சுவை காட்சிகள் யாரையும் புண்படுத்துபவையாகவோ அல்லது தவறாக சிந்திக்கவைப்பதாகவோ இருந்ததில்லை.

ஜெயமோகன் போன்ற மோசமான பின்விளைவுகளைத்தரும் பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் எழுத்துக்களை விட  பல படங்களில் விளிம்பு நிலைமனிதராகவும் குப்பத்து மனிதனாகவே நடித்துவிட்டு போன லூசுமோகனின் நகைச்சுவைகாட்சிகள் முற்போக்கானதாகவே தெரிகிறது.

(பின்குறிப்பு: இக்கட்டுரையில் போடுவதற்காக லூசுமோகனின் புகைப்படத்தை தேடித்தேடி அலுத்துவிட்டேன். யாரிடமாவது லூசுமோகன் படம் இருந்தால் அனுப்பி வைக்கவும்)





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment