Re: [தமிழமுதம்] குடியரசு தினவிழா ஒத்திகை.........ருத்ரா
அன்புக் கவிஞர் ருத்ரா
////மூவர்ணக்கொடி
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.////
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.////
வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருது காணீர்
பிள்ளைகள் பெற்றந்தப் பூனை-அவை
பேருக் கொரு நிறமாகும்.
எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரே தரமன்றோ ?
பாரதியார்
+++++
வெள்ளை நிறத்துக் குள்ளே
உள்ளவை ஏழு நிறம் !
வெள்ளையும் மஞ்சளும் சேர்ந்தால்
விழிப்பது சிவப்பு நிறம் !
நிறத்தில் இல்லை தரம் !
உரத்தில் உண்டு தரம் !
சிரத்தில் வளரும் தரம் !
திறத்தில் உளது வரம் !
மேலே பார்த்தாலும்
கீழே பார்த்தாலும்
எந்தக் கொடி நிறத்திலும்
இருப்பது மூன்று நிறம் !!!
மேல் சாதி
கீழ்ச் சாதி
இடைச் சாதி
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++
2010/1/26 tamil payani <tamilpayani@gmail.com>
--2010/1/26 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>ருத்ராவின் குறும்பாக்கள்
================================ருத்ரா
குடியரசு தினவிழா ஒத்திகை
==========================
அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு
அறுபது ஆண்டுகளாய்..இன்னும்
ஒத்திகை மட்டுமே.இராணுவ வண்டிகளின் அணிவகுப்பு பகையாளிக்கேஅறுபது ஆண்டுகளாய்..இன்னும்மக்களாச்சி மட்டுமே.மூவர்ணக்கொடி
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்நான்கு தூண்களின் வர்ணமாகவே தெரியும்மூவர்ணக்கொடி இது.(நான்கு தூண்களின் ??? போர்த் எஸ்டேட்.. :) :) )
குடியரசு தினவிழா உரை
======================
புள்ளிவிவரங்களை
காகிதத்தில் சமைத்து தந்தது
ஐ.ஏ.எஸ்.காரர்கள்.
புள்ளிவிவரங்களைகண்டு சமைந்திட தந்ததுஎன்.ஆர்.ஐ.காரர்கள்.புரியவில்லை
============
15 அல்லது 22 தேசிய மொழிகளில்
மொழிபெயர்த்து தந்தாலும் புரியவில்லை.
ஜனநாயகம்..சுதந்திரம்.முப்பது முகமுடையாள் என்று செந்தமிழில்பாடித் தந்தாலும் புரியாதவர்கள்பிரிவினைவாதிகள்.. சர்வாதிகாரம்..
வறுமைக்கோடு
==============
உடைந்த சிலேட்டில் வரைந்த கோடு
இப்போது"கலர் டி.வி"யில்
தேர்தல் கிராஃபிக்ஸ் ஆச்சு.உடைந்த சிலேட்டில் வரைந்த கோடுஇப்போது"கலர் டி.வி"யில்தேர்தல் கிராஃபிக்ஸ் ஆச்சு.விரைவில் மடிக்கணியில் போடுவர் மழலைகள்.ராமராஜ்யம்
===========
ஜனநாயக ராமர்களே
ராமன் ஆண்டால் என்ன
ராவணன் ஆண்டால் என்ன என்று
தூங்கிய பிறகு
பண நாயக ராமர்களின்
பாசாங்கு ராமாயணம் இது.மக்களாட்சி இராமனின் ராமாயணம்அவதாரம் நோக்கம் நிறைவேறபணநாயக இராவணர்கள் அவசியம் தேவை.அரசியல் சட்டம்
===============.
காலிகோ பைண்டில் கனத்த புத்தகம் தான்
இப்போ மிச்சம் இருப்பது
முன்அட்டை பின்அட்டை மட்டும் தான்.காலிபோ பைண்டில் இருக்க அல்ல.மிச்ச சொச்சமின்றி அனைவருக்கும் பயன்படவே.முன்,பின் அட்டைகள் மக்களிடம் செல்ல தடையாகலாகாது.ஜனநாயக உரிமைக்கு போராடும் வக்கீல்கள்
=============================================
ஷரத்துகளில் தொலைந்ததை
ஷரத்துக்களால் தேடித்தருவதாக சொல்லும்
"மாயமான்" வேட்டைக்காரர்கள்.******************
தாஜ்மஹால்
===========
ஷாஜஹான் கட்டியது அல்ல.
நம் சுதந்திரத்தை பணியாரம்
சுட்டுத்திங்க வந்த தீவிரவாதிகளின்
ஃபை ஸ்டார் ஓட்டல்.ஷாஜஹான் காதலின் நினைவிடமாக்கியது.பாவம் தொலைத்து, புண்ணியம் தேட கங்கைக்கு போவது போலமிருகதனத்தை தொலைத்து, அன்பை தேட திவிரவாதிகள் வருமிடம்.அயல் நாட்டுக்கொள்கை
======================
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக
அண்டை நாட்டுக்காரனே இன்னும் நம்
சண்டை நாட்டுக்காரன்.அறுபது ஆண்டுகளாக சண்டைகாரனிடம்எல்லை தாண்டாமலேயே நாம்சண்டை நாட்டுக்காரனே இன்று பிச்சைகாரனாய்.
பாராளுமன்றக்கட்டிடம்
=====================
அழுக்கு அரசியல்களாய் இன்னும்
அடித்து துவைத்துக்கொண்டிருக்கும்
நம் சலவைக்(கல்)கட்டிடம்.அழுக்கு அரசியல்களால் இன்றளவும்அடித்து துவைக்கப் பட்டும்மக்களாட்சி மாண்பை காக்கும் கருவறை.
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment