Re: [அன்புடன்] இயக்குனர் இமயம் பாலா அவர்களே
நான் கடவுளுக்காக பாலாவுக்கு விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியே.
தாங்கள் எழுதியிருப்பது போல் அது கடவுளின் சத்தமும் அல்ல, பிறை
சூடியவனின் விருதும் அல்ல. விருது பெற்றதற்காக கடவுளுக்கு நன்றி
சொல்லுகிறீர்களா என்று பாலாவிடம் கேட்ட போது, இல்லாத கடவுளுக்கு ஏன்
நன்றி சொல்ல வேண்டும் என்றும், இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த
விருது என்றும் தன்னடக்கத்துடன் கூறியிருக்கிறார்.
"மண்ணுலகில் வாழ்பவர்கள் தான் கடவுள்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களால்"
2010/1/25 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>:
> இயக்குனர் இமயம் பாலா அவர்களே
> ===================================
>
> மனிதனுக்குள் இருந்த
> ரத்த சதையிலிருந்து
> வெட்டிய உங்கள் கதையில்
> சொட்டியது ரத்தம் அல்ல.
> கொட்டியது சத்தம்.
> கடவுளின் சத்தம்.
> மனிதனை முழுமையாக்க
> தன்னை ஊனமாய்
> விஸ்வரூபம் காட்டியதை
> நீங்கள் காட்டினீர்கள்.
> இதற்கு
> அந்த "பிறை சூடிய பித்தன்"
> தன் சடையிலிருந்த
> பிறையையே
> "விருது" ஆக
> கொடுத்துவிட்டான்.
> அதனால் உங்கள் அடுத்த படம்
> வரும் வரை
> நிலாக்களின் உலாக்கள்
> இங்கு இல்லை.
> இருளில் நாங்கள் தவிப்பதா?
> உங்கள் படைப்புக்காமிரா
> சூரியனை நோக்கிப்பார்க்கட்டும்.
> அந்த "கிரகணத்தில்"
> மதம் எனும் இருளை
> மன வெளிச்சம் வந்து
> அழித்துத்துடைக்கட்டும்.
> வாழ்க!உங்கள் திரைக்கலை!
>
> இப்படிக்கு
> அன்புடன் கவிஞர் ருத்ரா
> < epsivan@gmail.com >
>
>
>
>
> --
> அன்புடன் - உலகின் முதல்
> யுனித்தமிழ்க் குழுமம்
> buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment