Saturday, January 30, 2010

[தமிழமுதம்] 30 ஜனவரி - மகாத்மா காந்தி நினைவுநாள்

அஹிம்சையும்
ஆயுதமாக்கிய
வீரப்போராளியே...
வெள்ளையனை
வெகு நேர்த்தியாய்
வேட்டையாடிய வீரனே...
 
அன்று
வெளிப்பொருட்களைப்
புறக்கணித்து
நம் பொருட்களை
ஊக்குவித்து
தேசியம் பேசினாய்...
 
இன்று
வெளிநாட்டுச்
சந்தையாக்கத் துடிக்கும்
உள்நாட்டுக் களவாணிகள்
இந்த தேசத்தில்.....
 
உண்மையெனும்
ஆயுதம் ஏந்தி 
சுரண்டிப்பிழைக்கும்
வீணர்களின்
முகமூடி கிழித்தாய்...
 
இன்று
உண்மை மறைத்துப்
பொய்த்தூவும்
சொந்த ஊடகங்கள்
சதிராடி சம்பாதிக்கின்றன...
 
சுயநலப்பித்தற்ற
உன் பாதங்கள்...
சுயநலப்பித்தோடு
இன்றைய பதங்கள்...
 
அன்று
ஏழை தேசத்தில்
ஏழையோடு ஏழையாய்
மேலாடை தரிக்காத
வேந்தன் நீ...
 
இன்று
ஏழைக்கு எட்டாத
ரிசர்வ் வங்கித்
தாளாய்
பணக்கார வர்க்கத்தின்
பைக்குள் சிரித்தபடி
உறங்குகின்றாய்...
 
ஏழ்மை ஒழிக்கவும்
நேர்மை பேசவும்
இனி எவரிருக்கிறார் இங்கே...
 
ஆமாம்...
ஏழைகளும், கோழைகளும்
ஊழல்களும் மிகுந்த
இந்ததேசம் இப்பொழுது
இன்னொரு
காந்திக்கென
ஏங்கிக்காத்திருக்கிறதே.....

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment