Wednesday, January 27, 2010

Re: [அன்புடன்] Re: YouTube ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு

மிக்க நன்றி கவிஞர் ருத்ரா
 
ஆயிரம் தீவுகள் சென்று வந்து நானும் கவிதை எழுதி இருக்கிறேன். அது என் இரண்டாவது நூலில் இட்டேன் என்று ஞாபகம். வாசித்திருக்கிறீர்களா?

2010/1/27 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
"அன்புடன் புகாரி" அவர்களே!

சொர்க்கம் இரண்டு அல்ல‌
ஆயிரம்.
நான்
அந்த கனடாவின்
நயாகராவை தழுவிக்கிடக்கும்...
ஆயிரம் தீவுகளைச் சொல்கிறேன்.
அங்கு
நாங்கள் பயணம் செய்தபோது
அப்படித்தான் உணர்ந்தேன்.
வானத்தை உருக்கி
கீழே கிடத்திருப்பதைபோல‌
அந்த பளிங்கு சதைப்படலத்தை
கிழித்துக்கொண்டு
நீலமும் நுரையுமாக‌
அந்திச்சிவப்பு ரத்தத்தில்
"ஆவி விரைப்படகில்" விரைந்த போது
ஆவி துடிப்பாய்
ஆயிர‌ம் ஆயிர‌ம் காட்சிக‌ள்.
காகித‌ம் எடுத்து சென்றால்
க‌விதை வ‌ருவ‌தில்லை.
க‌விதை வ‌ரும்போது
காகித‌ம் எடுத்து செல்ல‌வில்லை.
ஆனால்  அங்கே
ஒவ்வொரு திவ‌லையும்
க‌வ‌லையை விர‌ட்டும் திவ‌லைக‌ள்.
காகித‌மும் க‌விதையும்
அங்கே காணாம‌ல் போய்விட்ட‌ன‌.
மித‌க்கும் வீடுக‌ள்.
தீவுக‌ள் போல் தெரியும்
அவ‌ர்க‌ள் முக‌ங்க‌ளில் எல்லாம்
சூரிய‌ன் காட்டும்
பூவின் காடுக‌ள்.
க‌ரை தோறும்
ம‌ர‌க‌த‌ப்பாயில் ப‌டுத்திருக்கும்
"த‌ர‌வு தாழிசை சுரித‌க‌" க‌லிப்பாக்க‌ள்.
அறுப‌துமைலும்
அந்த‌ த‌ண்ணீரில்
எப்ப‌டிக்க‌ரைந்த‌து?
எதைச்சொல்வ‌து?
எப்ப‌டிச்சொல்வ‌து?

யூக் குழாய் வ‌ழியே
நீங்க‌ள் பிழிந்த‌ தேன்குழ‌ல் க‌விதைக‌ள்
ஆயிர‌த்து ஒன்றாவ‌து சொர்க்க‌ம் அல்ல‌வா?
ம‌ழ‌லை ச‌முத்திர‌ங்க‌ளை
ம‌டியில் வைத்துக்கொண்டு
எத‌ற்கு உங்க‌ளுக்கு க‌ட‌ற்ப‌ய‌ண‌ம்?
பூக்க‌ள் ப‌ற்றி...
"கேர‌ள‌தேங்காய்" துருவ‌ல்க‌ள்
தூவிக்கிட‌ந்த‌ காட்சிக‌ள் ப‌ற்றி...
உங்க‌ள் சொற்க‌ள்
சொட்டு சொட்டாய் இனித்த‌ன‌.
காட்சிக‌ள் ஒவ்வொன்றும்
க‌வ்விக்கொண்ட‌ன‌ ம‌ன‌த்தையெல்லாம்.
புகாரி வ‌ழியே குர‌ல் கொடுக்க‌
"பார‌தி ராஜாக்க‌ள்" காமிராக்களோடு
எப்போது வ‌ந்தார்க‌ள்?
தென்னைம‌ர‌ங்க‌ளின் கூந்த‌ல்கூட‌ துல்லிய‌ம்.
உங்க‌ள் க‌விதைக‌ளால்
அங்கே த‌லை வாரி பூச்சூட்டிக்கொண்டேயிருந்தீர்க‌ள்.
அற்புத‌ம்!அருமை!
புகாரி அவர்க‌ளே!
உங்க‌ள் ம‌ழலைச்செல்வ‌ங்க‌ளுக்கு
என் ம‌னங்க‌னிந்த‌ வாழ்த்துக்க‌ள்.
க‌ண்ண‌தாச‌னுக்கு
இந்த‌ ம‌ழ‌லைப்பூக்க‌ளை
எப்ப‌டித்தெரியும்?
அவ‌ன் இப்ப‌டி இவ‌ர்க‌ளைப்
பாடிய‌தைத்தான் சொல்கிறேன்.
"ம‌ழை கூட‌ ஒரு நாளில் தேன் ஆக‌லாம்
ம‌ண‌ல் கூட‌ சில‌ நாளில் பொன்னாக‌லாம்"
ஆனாலும் அவை யாவும்
நீங்க‌ள் ஆகுமா?

அன்புச்செல்வ‌ங்க‌ளே!
வாழ்த்துக்க‌ள்!

இப்ப‌டிக்கு
அன்புட‌ன் ருத்ரா.





On Jan 26, 5:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
>  YouTube ஒன்றல்ல சொர்க்கம்
> இரண்டு<http://anbudanbuhari.blogspot.com/2010/01/youtube_26.html>
>
>  அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே.
> எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா
>
>    [image: YouTube] <http://www.youtube.com/> help
> center<http://www.google.com/support/youtube/>| e-mail
> options <http://www.youtube.com/account#notifications/events> | report
> spam<http://www.youtube.com/email_spam?v=1a&c=814LBe7EucRhoNviq8KyLx638c3f...>
>
> anbudanbuhari <http://www.youtube.com/user/anbudanbuhari> has shared a video
> with you on YouTube:
> அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே.
> எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா
>   <http://www.youtube.com/watch?v=pXq-HQwEyTU&feature=email>
> Double Heaven by Anbudan Buhari
> Canada<http://www.youtube.com/watch?v=pXq-HQwEyTU&feature=email>
> அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே.
> எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா
>
>  © 2009 YouTube, LLC
> 901 Cherry Ave, San Bruno, CA 94066
>
> --
> அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://pogathe.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
      யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment