Thursday, January 28, 2010

[தமிழமுதம்] மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சன் பிறந்தநாள் வாழ்த்துகள்...

மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சனின் 59வது பிறந்ததின வாழ்த்துகள்...
(CMனா சென்ட்ரல் மினிஸ்டருங்கோவ்.....)
 
2009 பிறந்தநாளில் மதுரை மன்னன்
2010 பிறந்தநாளில் மத்திய அமைச்சர்
2011 பிறந்தநாளில் ????
 
என்ற கேள்வியோடு,
 
மதுரை மன்னரே
சொல்லியடிக்கும் கில்லியே
அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையே
தூங்கா நகரின் தூங்கா விளக்கே..
இரண்டாம் அழகரே..
ஐந்தாம் ராஜ கோபுரமே...
எங்கள் பிரம்மாவே..
தமிழ் எழுத்தின் முதல் எழுத்தே... தமிழகத்தின் தலையெழுத்தே...
மாதா, பிதா, குரு, தெய்வம்... எங்களுக்கு நான்குமானவரே..
நாளைய தமிழகமே...
காப்பவன் கடவுளென்றால் நீ எங்களுக்கு கடவுளே...
ஏழைகள் துயர் துடைக்கவந்த எதிர்காலமே...
ஆற்றலரசே...
தையில் விளைந்த தைரியமே...
பிறந்தவனல்ல.. தோன்றியவன் நீ... தோன்றல் தொடரட்டும்..
உழைப்பால் உயர்ந்த உத்தமரே...
 
மதுரை சுற்றுவட்டத்தில் சுமார் 20 கிலோமீட்டர்வரை 10 அடிக்கு ஒரு ப்ளக்ஸ் போர்டு என அமர்க்களப்படுகிறது மதுரை... சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 அடிக்கு ஒரு குழல் விளக்கு + சூரியன் வடிவ ஒளி சிந்தும் 15 குழல் விளக்குகள் என தூங்கா நகரம் கடந்த 2 நாட்களாக இரவுமுழுவதும் வண்ண மயமென ஒளிசிந்திக் கலக்குகிறது...
 
குறிப்பு : தினமும் தொடரும் இரண்டுமணிநேர மின்தடையும் இரண்டு நாட்களாக தற்காலிகமாய் நிறுத்தப்பட்டுள்ளது மக்கள் மனதில் மகிழ்ச்சி(?)யை ஏற்படுத்தியுள்ளது...
 
அண்ணன் அஞ்சா நெஞ்சனின் 59வது பிறந்ததின விழா நாளை மதுரையின் பல்வேறு அரங்கங்களில் சிறந்த நலத்திட்ட உதவிகளோடு கோலாகலமாக துவங்கவிருக்கிறது...
 
மதுரை, மேலூர் சாலையில் தலைசிறந்த தொழிற்சாலைகள் துவக்கம், டைடல் பார்க்,  வைகை கூட்டு குடிநீர் திட்டம், மதுரையைப் பசுமையாக்கும் திட்டம், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் உயர்மட்ட பாலங்கள் மதுரையை இன்னொரு சென்னையாக்கும் முயற்சியில் என பட்டையைக் கிளப்பிவரும் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வாழிய பல்லாண்டு...
 
நாளைமுதல் மதுரையிலிருந்து புறநகர்களுக்கு 300 ஏசி பேருந்துகள் இயங்கப்போவதாக செவிவழிச் செய்தி... உண்மையா என்று தெரியவில்லை....
 
குறைந்தபட்சக்கட்டணம் 15 ரூபாய்...
 
ஏற்கனவே பெரியார் நிலையத்திலிருந்து சிம்மக்கல்லிற்கு 2 ரூபாய் குறைந்தபட்சக் கட்டணம் சொகுசுப்பேருந்தில் 5 ரூபாயாகவும், சிட்டி எக்ஸ்பிரஸில் 3 ரூபாயாகவும் வசூலிக்கப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே... மேலும் மதுரையில் இப்பொழுது 2 ரூபாய் கட்டணத்துடனான சாதாரண பேருந்துகளே இல்லை என்பதும் நீங்கள் அறிந்ததே.. இப்பொழுது இந்த குறைந்தபட்சக்கட்டணமான 2 ரூபாய்,  15 ரூபாயாக மாறப்போவது கண்டு அகமகிழ்கிறோம் நாங்கள்... 
 
நெசவாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மில் ஊழியர்கள் என
மாதத்திற்கு ரூ.3000க்கும் குறைவாக ஊதியம் பெறும் 85% பேர் வாழும் மதுரை மக்கள், ஓசியாய்க்கூட ஏசியைக் காணாத மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணம் செய்வார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம் தானே....
 
வாழ்க ஜனநாயகம்... வாழ்க அண்ணனின் மக்கள் தொண்டு...
 
ஏழை மக்களின் இதய தெய்வம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வாழிய பல்லாண்டு...
 


--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment