Re: [தமிழமுதம்] நம் குடியரசுவுக்கு ஒரு மணிவிழா......ருத்ரா
அமைதிப் புறாக்களை ஏவும் நண்பர் ருத்ரா,
/////சாதிகளும் மதங்களும்
எங்கள் உள்ளங்களில் எல்லாம்
புண்களாகிய போதும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்
பரிணாமத்தில் வந்த
"விழுப்புண்கள்" அவை.
கத்தியை தீட்டிகொண்டு
மீண்டும் பல
புதிய புண்களைப்பெற
எங்களுக்கு விருப்பமில்லை.
எங்கள் உள்ளங்களில் எல்லாம்
புண்களாகிய போதும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்
பரிணாமத்தில் வந்த
"விழுப்புண்கள்" அவை.
கத்தியை தீட்டிகொண்டு
மீண்டும் பல
புதிய புண்களைப்பெற
எங்களுக்கு விருப்பமில்லை.
இருப்பினும்
எவ்வளவு பெரிய நாடு?
எத்தனை எத்தனை கோடி
மக்கள் நாம்.
ஜனநாயகத்தின்
வெள்ளைப்புறாக்களாய்
இந்த உலகத்திற்கே
வெளிச்சம் காட்டுகிறோம்.
எவ்வளவு பெரிய நாடு?
எத்தனை எத்தனை கோடி
மக்கள் நாம்.
ஜனநாயகத்தின்
வெள்ளைப்புறாக்களாய்
இந்த உலகத்திற்கே
வெளிச்சம் காட்டுகிறோம்.
தேவத்தத்தன்களைப்
புறக்கணித்து
சிபியையும்
புத்தனையும் தான் நம்
புனித பூமியின்
புத்திரர்களாக பெற்றிருக்கிறோம்.
அறவழியின் அண்ணல்
காந்தியடிகள் தான்
நமக்கு
தினந்தோறும்
உதிக்கும் சூரியன்.
புறக்கணித்து
சிபியையும்
புத்தனையும் தான் நம்
புனித பூமியின்
புத்திரர்களாக பெற்றிருக்கிறோம்.
அறவழியின் அண்ணல்
காந்தியடிகள் தான்
நமக்கு
தினந்தோறும்
உதிக்கும் சூரியன்.
இருப்பினும்
எவ்வளவு பெரிய நாடு?
எத்தனை எத்தனை கோடி
மக்கள் நாம்.
ஜனநாயகத்தின்
வெள்ளைப் புறாக்களாய்
இந்த உலகத்திற்கே
வெளிச்சம் காட்டுகிறோம். ////
எவ்வளவு பெரிய நாடு?
எத்தனை எத்தனை கோடி
மக்கள் நாம்.
ஜனநாயகத்தின்
வெள்ளைப் புறாக்களாய்
இந்த உலகத்திற்கே
வெளிச்சம் காட்டுகிறோம். ////
உயர்ந்த குடியரசுக் காவிய வரிகள்
குடியரசுப் பாராட்டுடன்
சி. ஜெயபாரதன்.
சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++
2010/1/26 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
நம் குடியரசுவுக்கு ஒரு மணிவிழா
===============================================ருத்ரா
நெஞ்சம் நிறைகின்றது.
இதயத்த்துக்குள்
இமயமே
விம்மிப் புடைத்ததால்
உலகமே வியக்கும் வண்ணம்
உயர்ந்து நிற்கின்றோம்.
அறுபது ஆண்டுகளாய்
இங்கே
வாக்குச்சீட்டுகளைத்தான்
பயிர் செய்கிறோம்.
அப்படியிருந்தும்
பட்டினி தீரவில்லை தான்.
அதற்காக
நாற்றுகளுக்குப் பதில்
துப்பாக்கிகளை நடும்
துர் நடத்தைகளை
அறவே வெறுக்கிறோம்.
மானுடத்தைக் கருவறுக்கும்
மாமிசவாடையில் உதிக்கும்
மற்றோரு சித்தாந்தங்களை
மண்ணோடு புதைத்துவிட
தயங்கமாட்டோம்.
இப்போதைய
மணித்துளிகள் வரை..இந்த
மணிவிழா காணும்
சுதந்திரமே எங்கள் சுவாசம்.
ரத்தத்துளிகளில்
பதியமிட்ட ரோஜாக்கள்
எங்களுக்கு தேவையில்லை.
சாதிகளும் மதங்களும்
எங்கள் உள்ளங்களில் எல்லாம்
புண்களாகிய போதும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்
பரிணாமத்தில் வந்த
"விழுப்புண்கள்" அவை.
கத்தியை தீட்டிகொண்டு
மீண்டும் பல
புதிய புண்களைப்பெற
எங்களுக்கு விருப்பமில்லை.
புண்களுக்கு
மருந்து தான் போடவேண்டும்.
புண்களை புதுப்பிக்கும்
புதுப்புண்கள் தேவையில்லை.
தாய் நாட்டின்
உயிர்மண்ணே..எங்கள்
உள் மூச்சு வெளி மூச்செல்லாம்.
வியாபாரம் தான்.
விளம்பரம் தான்.
வேட்டை தான்
கருப்பு பண
மூட்டைகள் தான்.
இருப்பினும்
எவ்வளவு பெரிய நாடு?
எத்தனை எத்தனை கோடி
மக்கள் நாம்.
ஜனநாயகத்தின்
வெள்ளைப்புறாக்களாய்
இந்த உலகத்திற்கே
வெளிச்சம் காட்டுகிறோம்.
எங்களை ஆட்சி செய்ய
ராணுவப் பருந்துகளுக்கு
இங்கே வேலையில்லை.
நம் ராணுவத்தின்
கனமான பீரங்கிகள் கூட
அமைதிப்புறாவின்
அழகிய சிறகுகளில்
செய்தது தான்.
தேவத்தத்தன்களைப்
புறக்கணித்து
சிபியையும்
புத்தனையும் தான் நம்
புனித பூமியின்
புத்திரர்களாக பெற்றிருக்கிறோம்.
அறவழியின் அண்ணல்
காந்தியடிகள் தான்
நமக்கு
தினந்தோறும்
உதிக்கும் சூரியன்.
லஞ்சம்
இங்கும்
எங்கள் நாற்காலிகளில்
உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.
"நாற்காலிகள்"
இன்னும் பண்பு பூத்த
"இருகாலி"களாய்
பரிணாமம் அடையும் வரை
அவற்றோடு நாம்
கொடியேற்றிக்கொண்டு தான்
இருப்போம்.
அவனே தான் கொடுத்தான்.
அதற்காக
அதை சுதந்திரம் இல்லை
என்று சொல்லி
நம் கைகளில்
"குழப்ப"விலங்குகளை
பூட்டிக்கொள்வதா?"
"எடுத்தவன் கொடுக்கவைப்போம்
கொடுத்தவன் எடுக்கவைப்போம்"
............................
"எல்லோரும் கொண்டாடுவோம்"
கண்ணதாசனின் பாடல் வரிகளில்
இந்த மணிவிழா கொண்டாடுவோம்.
ஓட்டுகளின்
காகித அம்புகள் கூட
வறுமை அரக்கனை
வதம் செய்து கொண்டுதான்
இருக்கிறது.
சிந்தனையில்
வறுமைப்பட்டு போனவன்
அரக்கனையும் விட மோசமாக
இருப்பதனால் தான்
இந்த ஓட்டு நிழலே
போதும் என்று
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
கோடரியை எடுத்துக்கொண்டு
நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு
அடி மரத்தை வெட்டும்
அதி மேதாவிகள் அல்ல நாம்.
அதனால் தான்
இந்த மணிவிழா ஒலிகள்
கிலுகிலுப்பைகளாக இருந்தபோதும்
நாங்கள் கவலைப்படுவதில்லை.
ஏனெனில்
அப்படி தாலாட்டுபவள்
எங்கள் தாய் அல்லவா!
"ருத்ரா"வா இது?
வேண்டுமானால்
"புத்ரா" என்று
போட்டுக்கொள்கிறேன்.
ருத்ராக்களில் இருப்பதும்
புத்ராக்களில் இருப்பதும்
பாரத புத்திரர்கள்கள் தான்.
பாரத புத்திரர்களைத்தவிர
வேறு எவரும் இல்லை
=====================================================
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment