[அன்புடன்] Re: [தமிழமுதம்] ஆஸ்கார் இசை நாயகனுக்கு ஒரு பாராட்டு.....ருத்ரா.
கவிப் பெரு வேந்தர் ருத்ரா,
///அந்த "வந்தேமாதரம்"ஒன்றே போதும்!
முன்னூறு ஆண்டுகளாய்..இந்த
முத்துக்குரல்களையா
முடக்க நினைதோம் என்று
வந்த அன்றே அந்த
வெள்ளையனும்
வெளியேறி இருப்பானே!
வெள்ளமாய்
வெள்ளி அருவியாய்
விடுதலை ஊற்றை
விடுவிக்கும்
இசைப்பிரவாகம் அல்லவா அது!
முன்னூறு ஆண்டுகளாய்..இந்த
முத்துக்குரல்களையா
முடக்க நினைதோம் என்று
வந்த அன்றே அந்த
வெள்ளையனும்
வெளியேறி இருப்பானே!
வெள்ளமாய்
வெள்ளி அருவியாய்
விடுதலை ஊற்றை
விடுவிக்கும்
இசைப்பிரவாகம் அல்லவா அது!
உன் இசை மூச்சுக்கு
இந்த பத்மபூஷன்கள்
"பக்ராநங்கல்" கட்டிவைத்திடுமா?
இன்னும் இன்னும் அல்லவா
ஒரு உயரமான
விருது கட்டிவைத்துக்கொண்டு
காத்திருக்க வேண்டும்.
பாரத ரத்னா கூட பாதி ரத்னா தான்.
உன் கணிப்பொறியில் தான்
அந்த கலைவாணி குடியிருக்கிறாள்.
அவளது வீணைக்குள்
அல்லாவின் ஒலியும்
ஆகாயம் போல் பரவியே
இசைவிரிக்கும். ////
நண்பரே,
அந்த கலைவாணி குடியிருக்கிறாள்.
அவளது வீணைக்குள்
அல்லாவின் ஒலியும்
ஆகாயம் போல் பரவியே
இசைவிரிக்கும். ////
நண்பரே,
கலைவாணியே உயிரோடு வந்து உம்
கழுத்தில் மாலை இடுவாள்
இந்த இசை ஞானியைப் பற்றி
எழுதிய பொன் வரிகளுக்கு.
பாராட்டுகள் ருத்ரா.
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++
2010/1/28 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
ஆஸ்கார் இசை நாயகனுக்கு ஒரு பாராட்டு.....ருத்ரா.
===============================================
ஆஸ்கார் இசை நாயகன்
ஏ.ஆர்.ரகுமான் அவர்களே!
உயரிய பதக்கம் பத்ம பூஷன்
உங்களுக்கு கிடைத்ததற்கு
பாராட்டு!பாராட்டு!பாராட்டுகள்!
ஆங்கில "ஆக்டேவ்"
சுரங்களின் சுரங்கத்து
அடிவயிற்று வைரங்களையும்
அனாயாசமாய் அள்ளிக்கொண்டு
வந்ததில்
ஆஸ்கார் உனக்கு மகுடம் சூட்டியது.
அன்னை நாட்டின் இதய ஒலிகள்
உனக்கு அந்நியமா என்ன?
அந்த "வந்தேமாதரம்"ஒன்றே போதும்!
முன்னூறு ஆண்டுகளாய்..இந்த
முத்துக்குரல்களையா
முடக்க நினைதோம் என்று
வந்த அன்றே அந்த
வெள்ளையனும்
வெளியேறி இருப்பானே!
வெள்ளமாய்
வெள்ளி அருவியாய்
விடுதலை ஊற்றை
விடுவிக்கும்
இசைப்பிரவாகம் அல்லவா அது!
உன் இசை மூச்சுக்கு
இந்த பத்மபூஷன்கள்
"பக்ராநங்கல்" கட்டிவைத்திடுமா?
இன்னும் இன்னும் அல்லவா
ஒரு உயரமான
விருது கட்டிவைத்துக்கொண்டு
காத்திருக்க வேண்டும்.
பாரத ரத்னா கூட பாதி ரத்னா தான்.
உன் கணிப்பொறியில் தான்
அந்த கலைவாணி குடியிருக்கிறாள்.
அவளது வீணைக்குள்
அல்லாவின் ஒலியும்
ஆகாயம் போல் பரவியே
இசைவிரிக்கும்.
நரம்புக்கருவி
தோல்கருவி
துளைக்கருவி
என்று நூற்றுக்கணக்கான
விசைக்கருவிகள்...உன்
இசைக்கருவில் உருவான
பிள்ளைகளாய் பிரசவித்து..இசைப்
பிரளயம் கூட்டுகின்றன.
எங்கள் ஆத்மாவின்
அழுக்கையெல்லாம்
எரிக்க... இனிக்கும்
எரிமலையாய்
வழியும் உன் இசை..எங்கள்
வலி நீக்கும்
ஒலியின் "லாவா"
அல்லவா!
உலகின் இசைவேந்தனே!
இசைத்துக்கொண்டேயிரு.
இந்த உலகம்
உன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்
உன் செல்ல "பொமரேனியன்" தான்.
வாழ்க உன் இசை!
வளர்க உன் இசை!
வெல்க உன் இசை!
வாழ்த்துக்களுடன்
கவிஞர் ருத்ரா.
=============================================================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment