Thursday, January 28, 2010

[அன்புடன்] காதல்கடிதம்

காலையில் சென்று வந்த
கடைத்தெரு கண்முன் வரமறுக்கிறது
காளைபருவத்தில் படித்த சாண்டில்யனின்
பூம்புகாரின் அங்காடித்தெரு கண்முன் விரிகிறது
காதல் நம்மிடையே பிறந்தால்
தயவுசெய்து நீயோ நானோ
வாய் வார்த்தைகளால் சொல்லக்கூடாது
கடிதங்களில் தான் சொல்லவேண்டும்
கவிதையாயிருந்தால் உத்தமம்
நீ அதில் வார்க்கும் வார்த்தைகள் எல்லாம்
கலைடாஸ்கோப்பில் இடப்பட்ட
வண்ண வளையல்களாய் எண்ணகோலமிடும்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment