Tuesday, January 26, 2010

[அன்புடன்] குடியரசு தினவிழா ஒத்திகை...ருத்ரா

ருத்ராவின் குறும்பாக்கள்
================================ருத்ரா


குடியரசு தினவிழா ஒத்திகை
==========================

அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு
அறுபது ஆண்டுகளாய்..இன்னும்
ஒத்திகை மட்டுமே.


மூவர்ணக்கொடி
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.

குடியரசு தினவிழா உரை
======================
புள்ளிவிவரங்களை
காகிதத்தில் சமைத்து தந்தது
ஐ.ஏ.எஸ்.காரர்கள்.


புரிய‌வில்லை
============
15 அல்ல‌து 22 தேசிய‌ மொழிக‌ளில்
மொழிபெய‌ர்த்து த‌ந்தாலும் புரிய‌வில்லை.
ஜ‌ன‌நாய‌க‌ம்..சுத‌ந்திர‌ம்.

வ‌றுமைக்கோடு
==============

உடைந்த‌ சிலேட்டில் வ‌ரைந்த கோடு
இப்போது"க‌ல‌ர் டி.வி"யில்
தேர்த‌ல் கிராஃபிக்ஸ் ஆச்சு.

ராம‌ராஜ்ய‌ம்
===========
ஜ‌ன‌நாய‌க‌ ராம‌ர்க‌ளே
ராம‌ன் ஆண்டால் என்ன
ராவ‌ண‌ன் ஆண்டால் என்ன‌ என்று
தூங்கிய‌ பிற‌கு
ப‌ண‌ நாய‌க‌ ராம‌ர்க‌ளின்
பாசாங்கு ராமாய‌ண‌ம் இது.

அரசியல் சட்டம்
===============.
காலிகோ பைண்டில் க‌ன‌த்த‌ புத்த‌க‌ம் தான்
இப்போ மிச்சம் இருப்பது
முன்அட்டை பின்அட்டை மட்டும் தான்.

மூவர்ணக்கொடி
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.

குடியரசு தினவிழா உரை
======================
புள்ளிவிவரங்களை
காகிதத்தில் சமைத்து தந்தது
ஐ.ஏ.எஸ்.காரர்கள்.


புரிய‌வில்லை
============
15 அல்ல‌து 22 தேசிய‌ மொழிக‌ளில்
மொழிபெய‌ர்த்து த‌ந்தாலும் புரிய‌வில்லை.
ஜ‌ன‌நாய‌க‌ம்..சுத‌ந்திர‌ம்.

வ‌றுமைக்கோடு
==============

உடைந்த‌ சிலேட்டில் வ‌ரைந்த கோடு
இப்போது"க‌ல‌ர் டி.வி"யில்
தேர்த‌ல் கிராஃபிக்ஸ் ஆச்சு.

ராம‌ராஜ்ய‌ம்
===========
ஜ‌ன‌நாய‌க‌ ராம‌ர்க‌ளே
ராம‌ன் ஆண்டால் என்ன
ராவ‌ண‌ன் ஆண்டால் என்ன‌ என்று
தூங்கிய‌ பிற‌கு
ப‌ண‌ நாய‌க‌ ராம‌ர்க‌ளின்
பாசாங்கு ராமாய‌ண‌ம் இது.

ஜனநாயக உரிமைக்கு போராடும் வக்கீல்கள்
=============================================
ஷரத்துகளில் தொலைந்ததை
ஷரத்துக்களால் தேடித்தருவதாக சொல்லும்
"மாயமான்" வேட்டைக்காரர்கள்.

தாஜ்மஹால்
===========
ஷாஜஹான் கட்டியது அல்ல.
நம் சுதந்திரத்தை பணியாரம்
சுட்டுத்திங்க வந்த தீவிரவாதிகளின்
ஃபை ஸ்டார் ஓட்ட‌ல்.


அய‌ல் நாட்டுக்கொள்கை
======================
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக‌
அண்டை நாட்டுக்காரனே இன்னும் நம்
ச‌ண்டை நாட்டுக்கார‌ன்.

பாராளுமன்றக்கட்டிடம்
=====================
அழுக்கு அரசியல்க‌ளாய் இன்னும்
அடித்து துவைத்துக்கொண்டிருக்கும்
நம் ச‌ல‌வைக்(க‌ல்)கட்டிட‌ம்.

=================================================

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment