Saturday, January 30, 2010

[தமிழமுதம்] Re: கற்போம் , கற்பிப்போம் : ர்,ற் / ல்,ள்,ழ் / ன்,ண் / ஒற்று

இடைவெளிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
 
சில ஒத்த வார்த்தைகளின் பொருள் பார்ப்போம் இங்கு
 
1) நினைத்தல், எண்ணுதல் :
''இரண்டும் ஒரே பொருள் தருவதாய்த்தான் எண்ணியிருந்தேன்''
 
--மேலே சொன்னதில் பிழையுள்ளது . ஆம் அது 
 
" இரண்டும் ஒரே பொருள் தருவதாய்த்தான் நினைத்திருந்தேன்''  என்பதுதான் சரியானது 
 
நினைத்தல் = கடந்தகாலத்தைப் பற்றி அசைபோடுவது பற்றிச்  சொல்லுவது 
எண்ணுதல் = வருங்காலம்பற்றி திட்டமிடும்போது சொல்லுவது   
 
2)வலை, திரை :
 
வலை - பிடிப்பதற்காக விரிப்பது  (எகா - மீன்வலை)
திரை -  நுழையவிடாமல் தடுப்பதற்காக அமைப்பது(எகா - சன்னல்திரை)
 
இப்போது '' கொசுவலை'' பற்றிப் பார்ப்போம். இந்த பெயர்தான் நாம் பயன்படுத்துகிறோம் .ஆனால்........ 
 
கொசு உள்ளே நுழையாமல் இருக்கப் அமைக்கப்பட்டிருக்கும் திரை அதுவாகும் எனில்
''கொசுத்திரை'' என்பதே சரியான சொல்லாக அமையும்
 
[நன்றி: மா.நன்னன் அய்யா]
(தொடருங்கள் ........)

On 1/11/10, துரை.ந.உ <vce.projects@gmail.com> wrote:

On 1/9/10, துரை.ந.உ <vce.projects@gmail.com> wrote:

அன்பின் உள்ளங்களே .,
  இது எங்களைப் போன்ற  ஆரம்பக்கட்ட / தமிழின்பால் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .
இங்கே
ர வருமா?  / ற வருமா??
ல வருமா? / ள வருமா?? / ழ வருமா???
ன வருமா? /ண வருமா??
இங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா ? வராதா ??
 
அவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி ?
-''இலக்கணப்படி'' என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்
 
சரி , அவர்கள் எளிதாகப்
எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...?
 
ஒரு முயற்சிதானே ! செய்து பார்க்கலாம் .  எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . தமிழ் தெளிவடையும் .
 
இந்த இழையில் கற்போம்... கற்பிப்போம் ...
 
 நான் ஆரம்பித்து வைக்கிறேன் ...
 
சின்ன 'ர' (ர்) ,பெரிய 'ற' (ற்) 
 
1)தரும் , பெறும் : 
தருபர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே / சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே 'தரும்' க்கு சின்ன போடுங்க   
 
பிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே 'பெறும்'க்கு பெரிய போடுங்க
 
 2) சிறிய , பெரிய :
இதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .
 
'சிறிய' வுக்கு பெரிய போடுங்க
'பெரிய' வுக்கு சின்ன போடுங்க
( நன்றி ; கல்பட்டார் அவர்களுக்கு)
 
[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]
 
(தொடருங்க  நீங்க  ........)
--
என்றும் அன்புடன்  --  துரை --
 
ர்,ற் :
 
#அரிய,அறிய :

அரிய: அருமையான / அபூர்வமான / வித்தியாசமான்

தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்

--சின்ன போடுங்க

அறிய: தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறைய உண்டு

-- பெரிய போடுங்க

ன்,ண் :

ன் பெரிய வுக்கு முன்னாடி சின்ன வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]

ண் வுக்கு முன்னாடி பெரிய வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]

[ நன்றி :

வேந்தன் அய்யா ]

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment