Thursday, January 28, 2010

[தமிழமுதம்] குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று....

என்ன ஒரு அழகானக் கவிதை, கவிஞர் வாலிய வாழ்த்துவோம்.

இனி கேளுங்கள்:



Song: kuzhandhaiyum theyvamum - பாடல்: குழந்தையும் தெய்வமும்
Movie: kuzhandhaiyum theyvamum - திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
Singers: P. suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1965

 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது 
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது 
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது 
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் 
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் 
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்


--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment