Friday, January 29, 2010

[தமிழமுதம்] நாம ஏன் இப்படி இருக்கோம்

எனக்கு என் அம்மா கூட சந்தைக்கு போகும் போதெல்லாம் சில சமயம் டென்ஷன் ஆகும்... அங்க இருக்கும் சின்னச் சின்னக் கடைகளில் காய்கறி விற்பவர்களிடம் பேரம் பேசுவார்கள். இன்னிக்கு காலையில சந்தைக்கு போயிட்டு இறால் வாங்கிட்டு அப்படியே காய்கறி வாங்கும் போது பயிறு வித்தாங்க... அது என்ன பயிறுன்னு தெரியல கட்டு 8 ரூபா சொன்னாங்க அந்த வயதான பாட்டி, என்னோட அம்மா 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு கேட்டதும், அந்தப் பாட்டி போம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எனக்கு என் அம்மா மேல் ரொம்ப கோபம் வந்துடுச்சு. நான் அந்தப்பாட்டிக்கிட்ட 8 ரூபாய் கொடுத்ததும் அம்மா என்னடா நீ ன்னு என்கிட்ட கோபப்பட்டாங்க. அப்போ சொன்னேன் AC போட்டிருக்கும் சூப்பர் மார்க்கெட் போனா அவன் என்ன விலை சொன்னாலும் கேக்காம வாங்கிட்டு வரீங்க, ஒரு பெரிய கடைக்கு துணி எடுக்க போனா, அங்க எவ்வளவு சொல்றானோ அந்த விலை கொடுத்துட்டு வரீங்க ஆனா ரோடோரத்துல் ஒருத்தன் கடை போட்டிருந்தா அந்தப் பொருள் எவ்வளவு தரமா இருந்தாலும், பேரம் பேசி, விலை குறைக்காம வாங்குறது இல்லை, ஏன்னு கேட்டேன்? அந்த வயதான பாட்டி வந்து விக்கிறாங்க, அவுங்க சொல்ற விலைக்கு பொருள் வாங்கினா என்னன்னு கேட்டுட்டு வந்துட்டேன்...

நான் சிந்திக்கிறது சரியா தப்பான்னு தெரியல. But this is wat i felt.



--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment