[தமிழமுதம்] கீதாஞ்சலி (29) - புதுப்பித்திடு காலை ஒளியை
கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை ! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
களைத்து மயங்கும் இரவில் சளைத்து, உன்னை நம்பி பொறுப்பை எல்லோம் உன்மேல் போட்டு விட்டு, நித்திரையில் என்னைத் தள்ளி புரண்டு போரா டாமல் பொத்தெனச் சாய வேண்டும் நான் ! பட்டொளி வீசிப் பறக்கும் எந்தன் ஆன்மீக உணர்ச்சியை தூண்டி விட்டு புகுத்தக் கூடாது, தகுந்த பயிற்சி முறை யின்றி உன்னைத் தொழுதிடத் துவங்கும் போது ! தேயும் இன்றைய நாள் சாயும் வேளையில் கண்களைக் கிரங்க வைத்து இரவின் முகத் திரையை இழுத்து மூடுவோன் நீ ஒருவனே ! புதிய மகிழ்ச்சி பூத்துப் புலரும் காலைப் பொழுதில், விழிக்கும் கண்களுக்கு ஒளியை ஊட்டிப் புதுப்பித்து அடுத்த நாளை மீண்டும் உதிக்க வைப்பவன் நீ ஒருவனே ! ********** |
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment