[தமிழமுதம்] Re: கண்ணீர்த் துளிகள்...
ஏழ்மை..
விண்மீன் பொத்தல்
மேகச்சேறு
நிலவுக்கிழிசலென
ஏழ்மையாய் வானம்
எம்மைபோலவே...
சமாதி...
உயிரோடு என்னைப்
புதைக்காதீர்கள் எனக்
கதறியழுதது நிலம்...
மேலே பாலித்தீன்
குப்பைகள்...
ஏளனம்..
சிரித்தபடி
நிறைந்திருந்தார்
காந்தி...
கள்ளுக்கடைக்
கல்லாவில்
எது குப்பை...?
குப்பைத் தொட்டியில்
சிரித்தது குழந்தை...
கண்ணீர்விட்டது
இந்த வறுமை தேசம்...
விவாகரத்து...
இனி என்ன
உறவு
இருக்க முடியும்
மலருக்கும் வண்டுக்கும்...?
காய்ந்த சருகாய் மலர்...
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
-- நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment