[அன்புடன்] சொல்லச் சொல்ல இனிக்குதடா . . . (1)
ஒரு யுகத்தின் தோல்விகளை ஒரு நொடி வெற்றி சமப்படுத்தும்
===========================================================
வெற்றியும், தோல்வியும் மனித வாழ்க்கையில் சகஜம் . வெற்றியைக் கண்டு
மகிழும் அதே மனம் தோல்வியைக் கண்டு துவளாமல் இருப்பதே அடுத்த வெற்றியின்
அடிக்கல்.
மனிதர்களுடைய வாழ்க்கையின் வெற்றியின் அளவுகோல் அவர்களது மனமே .
ஒவ்வொருவருடைய மனமுமே அவர்களது வெற்றியை நிர்ணயிக்கிறது. தமது வாழ்வின்
வெர்றியை மற்றவர்களின் பார்வையைக் கொண்டு அளக்க முற்படுபவர்கள் வெற்றி
காண்பது அரிது.
எனது உற்ற நண்பர் ஒருவர் தான் விரும்பிய வெளிநாட்டுக்குச் செல்வதற்காகப்
பல முயற்சிகள் எடுத்தார். ஏறக்குறைய நான்கு தடவைகள் அம்முயற்ச்சியில்
தோல்வியடைந்தார். தோல்வி மட்டுமல்ல ஏகப்பட்ட பணவிரயமும் அடைந்தார்.
ஆனால் அவர் மனம் சலிக்கவில்லை அவரது முயற்சியில் ஜந்தாவது தடவை
வெற்றியீட்டினார். இன்று அவர் தான் விரும்பிய அதே நாட்டினிலே தனது சொந்த
வியாபரத்தில் வெற்றி கண்டு மிகவும் மனநிரைவான வாழ்வை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
அவருக்கு கிடைத்த ஒவ்வொரு தோல்வியையும் அடுத்த வெற்றிக்கான அனுபவமாக
மாற்றிக் கொண்டார். அந்தத் தோல்வி கொடுத்த ஏமாற்றத்தை தனது அடுத்த
முயர்சிக்கான தூண்டுதலாக மாற்றிக் கொண்டார்.
ஒரு மனிதன் ஒன்பது முறை விழுந்தான் என்பதைக் காட்டிலும் அவன் பத்தாவது
முறை எழுந்தான் என்பதுவே முக்கியம்.
ஒருவருடைய முயற்சி, இலட்சியம் நியாயத்தோடு, மற்றவர்களின் அழிவின்
அடிப்படையில் அமைக்கப்படாததாக இருந்தால் தோல்விகள் ஏற்பட்டாலும்
தொடர்ந்து முயற்சி எடுத்தால் வெற்றி கண்பது நிச்சயம்.
வெற்றியும் தோல்வியும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்கள்.
ஆனால் எது வெற்றி? எது தோல்வி ? என்று நிர்ணயிப்பது அவரவர்களைப்
பொறுத்தது.
உங்களுடைய வாழ்வின் வெர்றிகளை மற்றவர்களின் மகிழ்ச்சியில் இருந்து
அளக்கப் பழகிக் கொண்டால், யுகாந்திரத் தோல்விகள் நொடி வெற்றிகளாக மாறும்
என்பதில் ஜயமேயில்லை
சக்தி சக்திதாசன்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment