Thursday, December 31, 2009

[அன்புடன்] அவள் அவன்

அவள் அவன்

கரத்தில் முத்தம்மிட்டாள் அவள் மறுவினாடி
கன்னத்தில் முத்தமிட்டான் அவன் அவளை நாடி

சில நொடிகளில் நடந்த பரிமாற்றம்
ஜென்மத்திற்கும் நினைவிருக்கும் ரசாயணமாற்றம்

பண்பாட்டு முத்தத்திற்கே இவ்வளவு பரவசம்
மிச்சமும் நடந்தால் இன்பத்தின் உச்சம்

இனிமையான உணர்வுதான் காதல்
வயப்பட்டவர்கள் மட்டும் உணரும் உன்னதம்

மனதை மகிழ்ச்சிப் படுத்தும் நினைவுகள்
மனதிற்குள் திரைப்படமாக ஓடும் சுவடுகள்

கவலை காணாமல் போக வைக்கும்
கண்களை மூடினால் கற்கண்டாய் இனிக்கும்

பசுமரத்து ஆணியாக பதிந்தது நிகழ்வு
பாவையை பார்த்தால் தெரிவது நிலவு

நிலவினை பார்த்தால் தெரிவது அவள்
அவள் நிலவை பார்த்தால் தெரிவது அவன்


இரா .இரவி www.kavimalar.com

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment