Monday, December 28, 2009

[தமிழமுதம்] பிச்சைகாரர்களிடம் திருடும் போலீஸ்

செங்கல்பட்டு : வண்டலூரை சேர்ந்தவர் குமார்(43). ரயில்வே டிரைவர். செங்கல்பட்டு & கடற்கரை ரயிலை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஓட்டிச் சென்றார். கார்டு ராமதாஸ் உடன் சென்றுள்ளார்.  செங்கல்பட்டில் இருந்து 10.15 மணிக்கு திரும்ப வேண்டும். 45 நிமிடம் இருந்ததால் இருவரும் ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சீனிவாசன் (27) அங்கு வந்தார். ஓய்வு நேரம் என்பதால் லுங்கி அணிந்திருந்தார்.

பிளாட்பாரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரரின் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார் சீனிவாசன்.
 இதைப்பார்த்த குமாரும், ராமதாசும் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், போலீஸ்காரனான என்னையே திட்டுகிறீர்களா? என்று டிரைவர் குமாரை உயிர்நிலையில் எட்டி உதைத்து முகத்தில் குத்தியுள்ளார். அதே இடத்தில் குமார் மயங்கி விழுந்தார். ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காயாம்பு வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போலீஸ்காரர் சீனிவாசனை தேடி வருகிறார். இந்நிலையில், சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே போலீஸ் எஸ்பி உத்தரவிட்டார்.

ரயில்வே டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சீனிவாசனை உடனே கைது செய்யக்கோரி, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள்  நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=2998

~காமேஷ்~


பிச்சைக்காரர்களை ஒழிக்க போலீஸ் சீனிவாசன் திருடினார்.. அதில என்ன தவறு இருக்கு ? 
சீனிவாசனுக்கு கொடுத்த தண்டனையை வாபஸ் பெற்று
ரயில்வே போலீஸ் எஸ்பி யை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
நீயும் பிச்சைகாரர்களை ஒழிக்க மாட்ட.. பிச்சைகாரர்களை ஒழிக்க பாடுபடுபவர்களுக்கும் தண்டனை கொடுப்பியா ?

இந்த விசயத்தில் முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் சட்டத்திற்கு புறம்பாக , பொதுமக்களுக்கு இடைஞ்சலாக பிச்சையெடுத்த பிச்சைக்காரரும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரயிவே ஊழியர்களான 
குமாருக்கும், ராமதாசும் தான்.
பிச்சை எடுக்க அரசு லைசன்சா கொடுக்குது ?


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment