Tuesday, December 29, 2009

[அன்புடன்] சித்தரின் சித்தத்திலே (2)

சித்தரின் சித்தத்திலே (2)
====================

பாம்பாட்டிச் சித்தர் பலவற்றையும் பற்றித் தன் சித்தத்திலே ஊறிய
கருத்துக்களை மெத்தென்ற தமிழில் மொத்தமாய்த் தந்துள்ளார்.

சித்தர்கள் பாடல்களையும் கருத்துக்களையும் படிப்பது, ரசிப்பது வாழ்க்கையை
வெறுத்து சந்நியாசம் நிலை கொள்ளுவது என்பது போன்ற எண்ணம் பலருக்கு உண்டு.

சித்தர்களுக்கு தெரியாததல்ல உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுமே
சித்தர்களாக முடியாதென்பது.

அப்படியானல் அவர்களின் பாடல்களின் பயன் தான் என்ன ?

அவர்களின் பாடல்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் போது,
வாழ்க்கையின் நிலையாமை புரிகிறது.

வாழ்க்கையின் நிலையாமையை நன்கு உணர்ந்து கொள்ளும் நிலை வரும் போது எம்
வாழ்விலே நாம் அடையும், பெறும் ஒவ்வொன்றுக்கும் எந்த வகையிலான
முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்னும் உண்மை புரிகிறது..

உலகத்தில் மனிதனை, மனிதனாக மதிக்கும் தன்மைக்கு கொடுக்கப்பட வேண்டிய
முக்கியத்துவம் உணரப்படுகிறது..

எங்கே மற்றுமொரு ஆக்கத்தைப் பார்ப்போமா ?

அழுக்குகள் சேர்ந்தவொரு குழியிலே
அள்ளியெடுத்தனராம் மண்ணை . . .
அப்படி என்ன சொல்கிறான் பாம்பாட்டிச் சித்தன் ?
அள்ளியெடுத்த மண்ணுடன்
துள்ளி ஓடும் குருதி வெள்ளத்தின்
சொட்டுத் துளிகள் சேர்த்து
இரு குயவர்கள் பண்ணுகிறார்களாம்
மட்பண்டம் ?
அது என்ன மட்பண்டம் ?
அன்னையும், தந்தையும் ஆக்கிய
சேயென்ற மட்பண்டமே அறிவீர் . . .
ஜய்யய்யோ ! அப்படி பண்ணிய மண்பானை
பிச்சை எடுபதற்குக் கூட உதவாமல் போகும்
பித்தன் பாம்பாட்டி சொல்லும் செய்தி . . .
இந்த உடல் கடைசியில் ஒன்றுக்குமே
உதவாமல் மண்ணோடு மண்ணாக, நீறாக
காற்றாக,, நீறாகக் கலந்து விடும்
இதற்காக ஏன் மானிடனே
அக்கிரமம், அநீதியாய் வாழ்கிறாய் என்பதுவே . . .
***** சக்தி சக்திதாசன் ****

இதை நமது பாம்பாட்டிச் சித்தர் எவ்வகையில் சொல்கிறார் ?

":ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே."

எத்த்னை அறிவுடன் எம் அக்காலச் சித்தர்கள் இத்தகைய படைப்புக்களை நமக்காக
விட்டுச் சென்றிருக்கிறார்கள் . . . பார்த்தீர்களா ? . . .

மீண்டும் மற்றொரு பாடலுடன்

சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment