[அன்புடன்] நீ பேச மாட்டாய் எனக்குத் தெரியும்
நீ பேச மாட்டாய் எனக்குத் தெரியும்
=====================================
எத்தனை காலங்கள் . . .?
உன் ஆலய வாசலில் . . . ?
விழிகள் பூத்திட
நெஞ்சின் வலிகள் பேசின ?
எப்படி . . . எப்படி . . .
எண்ணத்தின் ஊஞ்சலில் . . .
நினைவுகள் ஆடின ?
அபோதெல்லாம் பேசாத நீ
இப்போதா பேசப் போகிறாய் ?
உன் பார்வைகளின்
அர்த்தம்
புரிந்து கொண்டதால் தான்
மெளனத்தின் ஓசைகள்
நெஞ்சத்தில் தெளிவாக
மஞ்சத்தின் நினைவுகளை
வரைந்தன . . .
கனவுகளின் காட்சிகளின்
வர்ணத்தின் வனப்புகளை
வியப்புகளின் துணை கொண்டு
படைப்புக்களாக்கிய போது
நீ பேசவில்லையே . . . .
இப்போதா ? பேசப்போகிறாய்
இமைகள் படபடக்க
விழிகளின் கருமை கொண்டு
நீ எய்த பார்வைகள்
இதயத்தின் மையத்தில் இன்னும்
காயாமல் ஈரமாய் . . .
யாரும் காணத் போது
விரியும் உன் இதழ்களில்
மலர்ந்த அந்த மென்மையான
புன்னகையின் அர்த்தம் தேடி
எத்தனை ஆண்டுகள்
தவமாய்த் தவமிருந்து . . . .
அப்போதெல்லாம் பேச மறுத்த
பேசாம்டந்தையடி நீ . . .
இப்போதா ? பேசப்போகிறாய்
நீ பேசமாட்டாய்
எனக்குத் தெரியும் . . .
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment