Tuesday, December 29, 2009

[அன்புடன்] பெண்ணே உன்னை !

பெண்ணே உன்னை !

சின்னக் கருவிழியாள்
சித்திரப் பூம்பாவையவள்
முத்திரைப் புன்னகையால்
நித்திரையைப் பறித்து விட்டாள்

கயல்விழித் தேன்மொழியாள்
கணையொன்று தொடுத்ததினால்
கனவுகள் இன்றெனக்கு
கலர் கலராய் தோன்றுதம்மா

கருங்கூந்தல் அலைபாய
காரிகையின் செவ்விதழ்கள்
மலர்ந்துதித்த பொன்சிரிப்பு
மனதை விட்டு அகலவில்லை

தேன்பாயும் குயில் போல
தேமதுரத் தமிழ் ஒலிக்க
தோகையவள் மொழிமழையில்
தோய்ந்து நான் காய்ந்து விட்டேன்

கண்பார்வை பட்டதுமே
என் காட்சி நிறைந்து அங்கு
பெண்ணே உன்னை தூரிகையால்
வண்ணமாய் தீட்டிக் கொண்டேன்

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment