Monday, December 28, 2009

[அன்புடன்] சித்தரின் சித்தத்திலே

சித்தரின் சித்தத்திலே

சித்தர்களின் பாடல்கள் சிந்தையை வறுத்தெடுப்பவை. வாழ்க்கையின் அர்த்தத்தை
அறிய வைப்பவை. அதனுள் இருக்கும் கருத்துக்களைக் குதறிப் பார்க்கும் போது
வெங்காயம் ஞாபகத்திற்கு வரும். ஆமாம் உரித்துக் கொண்டே போனால் ஒன்றும்
இல்லாததுதான் வெங்காயம். எமது மனதின் தோலை உரித்துக் கொண்டே போனால் அங்கே
உண்மை வெளிப்படும்.

எனது இலக்கியத் திடலில் கொஞ்சம் சித்தர்கள் பாடல்களோடு ஒரு சிறிய
விளையாட்டு.

பாம்பாட்டிச் சித்தர் கூடு விட்டு கூடு பாய்ந்து அரசர் உடலில்
நுழைகிறார். அவரின் பாடல்கள் ராணிக்கு வியப்பை உண்டு பண்ணுகிறது. உலக
உல்லாசங்களில் திளைத்திருந்த தனது கணவரா இப்படிப் பாடுகிறார் என்று
திகைத்து விடுகிறார்.

பெரியதோர் மாடம், வண்ண மணி மண்டபம்
இத்தனையும் கொண்டவர்கள்
விணை முட்டும் மதில் கட்டி அதனுள்ளே
மறைந்திருக்கும் மகத்தான அரண்மணைகள்
இன்னும் எத்தனை, எத்த்னை உள்ளனவோ
அத்தனையும் அவர்களுடன் கூட வந்திடுமோ
இத்தகைய உண்மைதனை
உள்ளத்திலே கொண்டவர்கள் எப்படி
இவ்வுலக செல்வங்களில் நாட்டம் கொள்வார் ?
என்று பாடிப் பாடி நீ
ஆடு பாம்பே . . .

**** சக்தி சக்திதாசன் *****

இதோ இதைப் பாம்பாட்டிச் சித்தர் எவ்வாறு கூறுகிறார் ?

"மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே"

மீண்டும் மற்றொரு பாடலுடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment