Re: [அன்புடன்] கதவொன்று திறக்கிறது . . . .
போயேதான் போகட்டும்
மெய்யான நினைவுகள்
மேதினியில் மிஞ்சட்டும்
விதையாகி முளையுங்கள்
வீரத்தின் அங்கமாய்
விவேகத்தைக் கொள்ளுங்கள்
கதவொன்று திறக்கிறது . . . .==========================கதவொன்று திறக்கிறது
கனவொன்று நிகழ்கிறது
மறைகின்ற வருடத்தில்
புலர்கின்ற புதுயுகமேநாளைய வருடத்தின்
இன்றைய நிச்சயம்
நேற்றோடு போகட்டும்
காற்றான துயரங்கள்உழைப்பவரின் கைகள்
உயர்ந்திங்கு ஓங்கட்டும்
அழுது நின்ற முகங்களில்
ஆனந்தம் பொங்கட்டும்பொய்யான பொழுதுகள்
போயேதான் போகட்டும்
மெய்யான நினைவுகள்
மேதினியில் மிஞ்சட்டும்வஞ்சகங்கள் புதையவும்
துரோகங்கள் ஒழியவும்
உண்மையெனும் மொழி
உலகெங்கும் செழிக்கட்டும்சொல்லாத சொற்கள்
கல்லாத பாடங்கள்
பொல்லாத வேளைகள்
நில்லாமல் விலகட்டும்இரண்டாயிரத்து ஒன்பது
இருளாகி மறையுது
இரண்டாயிரத்துப் பத்து
இளங்காலையாய் புலருதுநெஞ்சத்தில் துணிவோடு
நேரத்தின் துணையோடு
முன்னேறும் வகை கண்டு
முன்னோக்கிச் செல்லுங்கள்விழுந்த இடத்தில்
விதையாகி முளையுங்கள்
வீரத்தின் அங்கமாய்
விவேகத்தைக் கொள்ளுங்கள்வரும் இந்த வருடம்
விழிநீரைத் துடைத்திங்கு
வாழ்க்கையில் மகிழ்ச்சி தர
மும்மாரி வாழ்த்துக்கள்அன்புடன்
--
சக்தி சக்திதாசன்
குடும்பம்
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment