[அன்புடன்] எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்.
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)
அறைகள் தோறும்தரை முழுதும்
இரைந்துகிடந்தன கோப்பைகள்
ஊர்வன ஜந்தொன்றைப் போல
வயிற்று மேட்டினால்
ஊர்ந்துவந்த குழந்தை
முதலெடுத்த கோப்பையினை
வாயிலிட்டு நக்கிப் பின்னர்
பிடிக்காத பாண்டமெனத் தூக்கியெறிந்தது
கண்ணாடிச் சன்னலில் பட்டுச்
சிதறியன இரண்டும்
குழந்தைக் காப்பாளி வந்தாள்
சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பறணில் விடப்பட்ட தூய குழந்தை
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment