Tuesday, December 29, 2009

[அன்புடன்] ஏக்கம் கொண்டேன் எந்தன் தோழா

ஏக்கம் கொண்டேன் எந்தன் தோழா
==================================
உழைத்து உழைத்து
உந்தன் கரங்கள்
சிவந்து போயின
எந்தன் தோழா !

நினைத்து நினைத்து
துவண்டு போயிற்று
உந்தன் நெஞ்சம்
எந்தன் தோழா !

முளைத்து முளைத்து
தளைக்க நீ முயற்சிக்கும் போதெல்லாம்
அழித்து விடுகின்றார்
எந்தன் தோழா !

ஒளிந்து ஒளிந்து
உந்தன் வேர்வையில்
தங்கள் வாழ்வினை நடத்துகிறார்
எந்தன் தோழா !

பொழிந்து பொழிந்து
மேடை தோறும் பேசுகிறார்
கழிந்து போயின காலமெலாம்
எந்தன் தோழா !

மலிந்து மலிந்து
நீயும் வாடாமல் இனிமேல்
நிமிர்ந்து நின்றிடு
எந்தன் தோழா !

விழித்து விழித்து
எழுந்திடட்டும் உந்தன் சமுதாயம்
ஒளித்து ஓடட்டும் ஒட்டுண்ணிகள்
எந்தன் தோழ !

படித்து படித்து
சொல்லியும் கேளார் இவர்கள்
ஏக்கம் கொண்டேன் உன்னை எண்ணி
எந்தன் தோழா !

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment