Thursday, December 31, 2009

[அன்புடன்] 2010 -இதயம் ஒரு வெற்று காகிதம் !!!




2010 -இதயம் ஒரு வெற்று காகிதம் !!!

 
 இதயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வதுவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !



கனவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது

இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!

ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!

கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!

துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

இதுநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.!


இனி வரும் நாட்களில் ஏழைகள்

 இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!
 
நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!
 ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே

உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் .
இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!


சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை .
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.
நாளை முதல் உங்களின் இதயங்களும் ஒரு வெற்று காகிதம்தான்
அதில் நிரப்பத் தொடங்குங்கள் பல இலட்சிய எண்ணங்களை .



இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.
 
நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .


புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறகும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள் வெற்றி நிச்சயம்.!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
 
என்றும் அன்புடன்
 சங்கர்  ........................

 

 


 

 


--
http://wwwrasigancom.blogspot.com
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!






--
http://wwwrasigancom.blogspot.com
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!



0 comments:

  • Post a Comment