Thursday, December 31, 2009

[அன்புடன்] யான் பாடும் தாலாட்டு

யான் பாடும் தாலாட்டு
======================

யான் பாடும் தாலாட்டு தமிழை நெஞ்சோடு
யாசித்து சுவாசிக்கும் ஓராட்டு
பூவாசம் பொங்கும் என் தாய் தந்த மொழியின்
பூந்தென்றல் போன்றதொரு இனிமையின் ஆராதிப்பு
இன்பமிகு இசையோடு கவி பல ஆக்கிட வழி
காட்டிடும் இனியதாம் எந்தன் தமிழ்மொழி
தமிழ் மண்ணில் தவழ்ந்து உருண்டிடும் போது
தானாக மேனியில் ஓட்டிய மொழியின் வாசமிது
என் பாட்டு நீ கேட்டு விழி தூய்த்து ஓர் கணம்
உனை மறக்கும் வேளை நான் எனை இழப்பேன்

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment