[அன்புடன்] சுய சிந்திப்பின் ஆரம்பம்
சுய சிந்திப்பின் ஆரம்பம்
======================
காலமெல்லாம்
கால்கடுக்க
கடந்து வந்த பாதை
கற்றுத்தந்த பாடம்
விட்டு வந்த அறிவை
பெற்றுக் கொள்ளச் சென்ற
முற்றும் திறந்த அரங்கில்
சற்றும் நினையா துவக்கம்
ஆரம்பம் எது ?
இடைவேளை எது ?
பயணத்தின் திசை நோக்கி
பலமான வினாக்கள்
நான் என்றும்
எனதென்றும்
என்னென்ன கற்பனைகள்
விண்ணென்ன ? மண்ணென்ன ?
முன்னென்ன ? பின்னென்ன ?
அழையாமல்
வந்தவைகள்
சொல்லாமல்
சென்றவைகள்
அனைத்தையும் கண்ட பின்னும்
அலைபாயும் எண்ணங்கள்
விழுந்த இடத்தில்
முளைத்த மரம் நான்
இடமும் எனதல்ல
விதையும் எனதல்ல
இடையில் வந்தவைகள்
இதயத்தில் எப்படி .. . . ?
புரிந்தவைகள் கடுகளவு
புரியாதவை . . . ?
கறைகளைக் கொஞ்சமாய்
கழுவும் முயற்சியில்
சுயமான சிந்திப்பின்
சுகமான ஆரம்பம்
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment