Thursday, December 31, 2009

[அன்புடன்] சொல்லச் சொல்ல இனிக்குதடா (2)

வார்த்தைகளைக் கவனித்தால் வாழ்வு சிறக்கும்
=============================================
எமது நாக்கிற்கு நரம்பு கிடையாது ஆகவே அது எத்தகைய வடிவிலும்
வளையக்கூடியது. எதையும் வரம்பின்றிப் பேசி விடும் வல்லமை கொண்டது.

உணர்ச்சிகள் உள்ளத்தில் எகிறிக்குதிக்கும் போது உணர்ச்சிகள்
கட்டுக்கடங்காமல் அலைபாயும். அவ்வேளையில் எமது நாக்கை கட்டுப்படுத்த
வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

எமது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் பொதுவாக இரண்டு முக்கிய
விளைவுகளைக் கொடுக்கக் கூடிய வல்லமை கொண்டது. எமது வார்த்தைகளைச்
செவிமடுப்பவரை மகிழ்ச்சிப்படுத்தவோ அன்றி மனம்வருத்தவோ செய்யும் ஆற்றலே
அவை.

ஆனால் அவற்றை எவ்வகையில் எவ்வாறு உபயோகிப்பது உகந்தது என்பதைச் சரிவரப்
புரிந்து கொள்ளாவிடில் வார்த்தைகளால் எவ்வகையான பிரயோஜனமும் இல்லை.

ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அவருக்கு தீங்கு விளைவிக்ககூடியவற்றை,
அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம் என்று எண்ணி உபயோகிப்பது முற்றிலும்
தவறாகும். நாம் சொல்லவ்து அவருக்கு சிறிது வருத்தமளிக்ககூடியதாக
இருப்பினும் அதிலிருக்கும் உண்மை அவருக்குப் பயனளிக்கும் என்று
தெரிந்தும் அதைக் கூறாதிருப்பதும் தவறாகும்.

அதேநேரம் நாம் கூறப்போவது அவரை வருத்தப் போகிறது, அதைக்கேட்பதினால்
அவருக்கு அது எந்த விதத்திலும் பயனளிக்காது என்று தெரிந்தால் எமது
நாவைக் கட்டுப்படுத்தி வார்த்தைகளை அடக்கி பேசாமல் இருந்து விடுவது
மிகவும் உத்தமமான செயல்.

எம்மை மர்ரவர்களைவிட உயர்த்திக் காட்டுவதற்காக மர்ரவர்கள் முன்னிலையில்
மர்ரொருவரைத் தாழ்த்தும் வகையில் வார்த்தைகளைப் பிரயோகிப்பது மிகவும்
தவறான செயலாகும்.

ஆக மொத்தம் வார்த்தைகளைக் கவனித்தால் வாழ்வு சிறக்கும்


சக்தி சக்திதாசன்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment