[அன்புடன்] புத்தாண்டே வருக !
புத்தாண்டே வருக !
====================
புத்தாண்டே விரைந்து வருக
நல்வாழ்வு கொண்டு தருக
நலம் காணும் வழிகள் சொல்க
நிலம் எங்கும் மகிழ்ச்சி பொங்க
வயல்கள் தோறும் விளைச்சல் பெருக
உழைக்கும் மக்கள் வாழ்க்கை செழிக்க
காலமெல்லாம் கண்ணீர் பெருக
வாழ்ந்த மக்கள் புன்னகை கொள்ள
இருப்பவர் இதயம் அன்புத்தாமரையாய் விரிய
இல்லாதோர் இல்லம் இன்பமாய் ஒளிர
அரசின் கரங்கள் செங்கோல் ஓச்ச
அனைவர்க்கும் சமனாய் வாழ்க்கை புலர
அனைவரும் இன்று ஓர் வழி நின்று
அனைத்து மதங்களும் ஒன்றெனப் பாடி
இணைந்து வணங்கி இசைபல பாடி
இகத்தில் வாழ்ந்திட புத்தாண்டே வருக
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment