[அன்புடன்] நில்லாமல் செல்லும் நிலவே !
நில்லாமல் செல்லும் நிலவே !
==============================
நில்லாமல் செல்லும் நிலவே
நீ
சொல்லாமல் சொல்லும்
கதைதான் என்ன ?
அன்றாடம் அலைகிறாய்
வானத்தின் மீது
செல்லாத இடம் நோக்கி
நில்லாமல் சென்றாலும்
அல்லாடும் உணர்வுகளுக்கு
உன்னால்
அணை போட முடிகிறதா ?
இருள் வேண்டும் என்கிறாய்
நிலவே . . . அது உந்தன்
எழில் காட்டத்தானே ?
யாரத்தேடி நீ
பாதித் திங்கள்
பாதியாகிப் போகிறாய் ?
பின்னர் யார் வரவால்
மீதித் திங்கள்
பூரணமாகிறாய் ?
பெளர்ணமி என்றோர்
நிகழ்வில்
எந்தன் தையலின் வதனம்
காட்டியதால் தானோ நிலவே
நாணி நீயும் மேகத்தினுள்
மறைகிறாய் ?
மையல் பூக்கும் அந்த
மங்கையின் பார்வைக்பூக்களின்
தழுவல் தந்திடும் குளிர்மை
வெண்ணிலவே உந்தன்
பால்வடியும் கதிர்களுக்கு
இல்லை என்றோரு ஏக்கம்
உனக்கு பூத்ததினால் தானோ
அமாவாசை என்றே நீயும்
காணமல் போய்விடுகிறாய்
நில்லாமல் செல்லும்
நிலவே
நின்று கொஞ்சம்
இன்றெனக்கு உந்தன் பதிலை
இயம்பிடுவாய்
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment