Re: [தமிழமுதம்] இந்தியாவை விட்டு விலகமாட்டோம், இந்திய எங்களை விலக்காதவரை !!! -- புலமைப் பித்தன் The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet. Your reply m
/////நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர் அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, 'தம்பி'க்குத் தாராளமாகக் கைகொடுத்த அக்னி சுப்ரமணியன் வெளியிட்டுள்ளமை சிறப்பு.
இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள் தான் பெரும்பாலானவர்கள்.
பகுத்தறிவுப் பெரியார் நிழலில் அண்ணா முதல் எம்ஜியார், அக்கா, கருணா வரை 60 ஆண்டுக் காலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் ஆட்சியும் எதிர்ப்பு வாதமும் புரிந்துவரும் பற்பல திராவிடக் கட்சிகளுக்குள் ஏன் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் இல்லை ?
நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர்
அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, 'தம்பி'க்குத் தாராளமாகக் கைகொடுத்த
தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளான இன்று - இந்தப் புத்தகத்தை அக்னி சுப்ரமணியன்
வெளியிட்டுள்ளமை சிறப்பு.இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது
எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள்
தான் பெரும்பாலானவர்கள்.வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை என்றார் பராதிதாசன். அந்த நிலையில்தான்
நாமும் இப்போது இருக்கிறோம். தமிழினம் விரோதத்தால் வீழ்த்தப்படவில்லை; அது
துரோகத்தால் வீழ்த்தப்பட்டது.இதற்காக நாம் யாரைக் குற்றஞ்சாட்டுவது...? நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகள்
தான். ராஜபக்சவுக்கு முன்னர் நம்மைத் தான் விசாரிக்க வேண்டும்.நாம் இதுவரை மத மாற்றம் பற்றித் தான் கேள்விப் பட்டிருக்கிறோம்; இங்கு தமிழ்
நாட்டில் ஒரு இன மாற்றமே நடைபெற்றுள்ளது. இங்கு தமிழன் தமிழனாக இல்லை.ஒர் இனத்தையே அழித்த பின்னர் அந்த இனத்தின் மொழிக்கு என்ன விழா வேண்டி
இருக்கிறது...? ஈழ நிலமே இரத்தத்தால் செம்மையாகிக் கிடக்கையில் செம்மொழிக்கு
என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறது...?உண்மையானவர்கள் இப்போது செய்ய வேண்டியது தமிழ் ஆராய்ச்சி இல்லை, தமிழன் பற்றிய
ஆராய்ச்சி தான். தமிழன் ஏன் இப்படி இருக்கிறான் என்பது தான் செய்ய வேண்டிய
ஆராய்ச்சி.ஒரு இலட்சம் பேர் இறந்த பின்னால் சிறிலங்கா அரசு மட்டுமா அதற்குக்
குற்றவாளி...? இந்திய அரசும் தான் குற்றவாளி. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவே
அதிக குற்றவாளி.தனித்துப் போராடிப் புலிகளை வெல்லும் திறன் இலங்கை இராணுவத்திற்கு
இருக்கிறதா...? அந்தப் போரை முன்னெடுத்ததே இந்திய அரசுதான்.புலிகள் அடியோடு இருக்கக்கூடாது; என்ன ஆயுதம் வேண்டுமானாலும் மக்கள் மீது
பயன்படுத்துங்கள் என்று துணை நின்றது இந்தியா தான்.ஒக்டோபர் மாதமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது
பதவியை விட்டு விலகி இருந்தால் டில்லியில் ஒர் அரசு இருந்திருக்குமா?டில்லியில் ஒர் அரசு இல்லாது போயிருந்தால் ஈழத்தில் ஒரு லட்சம் பேர்
கொல்லப்பட்டிருப்பார்களா...?அன்று தமது பதவிகளில் இருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி மைய அரசை
நீக்கி இருந்தால், இடைக்கால அரசு மட்டுமே இருந்திருக்கும்.ஈழத்தில் ஒரு இலட்சம் பேர் அப்போது கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஓர்
இடைக்கால அரசு அதற்கு ஆதரவு அளித்திருக்காது.இப்போது நான் கேட்கிறேன், அந்த மைய அரசு தொடர்ந்தும் பதவியில் இருந்ததற்கு யார்
பொறுப்பு...? அந்த மைய அரசை யார் முட்டுக் கொடுத்துத் தாங்கினார்களோ அவர்களே
ஈழத்தில் நடந்த கொலைகள் அனைத்துக்கும் காரணம்.இப்போது ஈழத்தில் எல்லோரையும் முடித்து விட்டோம் என்கிறது சிறிலங்கா அரசு;
தொடங்கிய ஒன்று முடியும், முடிந்த ஒன்று தொடங்கும். ஈழம் விடுதலை பெறும். நான்
உயிருடன் இருக்கும் போதே ஈழம் விடுதலை பெறும்.ஒரு இலட்சம் பேரைக் காவு கொடுத்த ஈழப் போர் உலகமெங்கும் பரந்திருக்கிற
தமிழர்களால் அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஈழத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொன்சேகா – ராஜபக்ச மோதலால் இந்த
உலகுக்கு விரைவில் தெரியவரும். அப்போது அவர்கள் அனைத்துலக சமூகத்தின்
விசாரணைகளின் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.இந்த விசாரணைகளில் இருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களை இந்தியா பாதுகாக்க
முற்படுகின்றது. ஆனால், இனியாவது இந்தியா திருந்த வேண்டும்; அதற்கு ஏற்ற
வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும்.தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பானது. ஒன்றுபட்ட
நண்பர்களே கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்தியா எங்களை 'விலக்கி'
சிறிலங்காவால் இந்தியாவிற்கு ஒருபோதும் பாதுகாப்பு இல்லை.
இந்தியாவில் இருந்து நாம் (தமிழ்நாட்டுத் தமிழர்கள்) 'விலகிச் செல்ல' மாட்டோம்;
ஆனால், இந்தியா எங்களை விலக்கி விடக்கூடாது.
விடக்கூடாது; இந்தியா உணர்ந்து செயற்பட வேண்டும்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment