Monday, December 28, 2009

Re: [அன்புடன்] சில கேள்விகளின் . . .

''தேன்'' இனிக்குமென்றே இதுவரை நினைத்திருந்தேன்
 
வலியையும் கொடுக்கும் என்று இப்போதுதான் உணர்ந்தேன் அய்யா 
 
(இதில் சில கருக்களை நான் எடுத்துக்கொள்வேன் எனக்கு 
அய்யாவின் அனுமதியுடன் :) 

 
On 12/27/09, Sakthi sakthithasan <sakthisakthithasan@googlemail.com> wrote:
சில கேள்விகளின் . . .
======================

சில பொழுதுகளின் தடங்கள்
நீளமாய் தெரிவதேன்
சில வார்த்தைகளின் உதிர்வு
நெஞ்சினை நெருடுவதேன்
சில பார்வைகளின் காயம்
இன்பமாய் வலிப்பதேன்
சில மெளனங்களின் மொழிகள்
சப்தமாய் உறைவதேன்
சில இரவுகளின் கருமை
துல்லியமாய்த் தெரிவதேன்
சில மேகங்களின் குழைவு
மழையாகிப் பொழிவதேன்
சில மலர்களின் வாழ்வு மட்டும்
மாலையோடு மறைவதேன்
சில கேள்விகளின் விடைகள் மட்டும்
சிக்காமல் தொலைவதேன்

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
      யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment