Saturday, December 26, 2009

[அன்புடன்] உரைக்க முடியா உணர்வதுவோ ?

உரைக்க முடியா உணர்வதுவோ ?
==============================

வானத்தின் மையத்தில் ஒரு
வண்ணவிளக்காக அவ்
வெண்ணிலவு பூத்திருக்க

மோனத்தின் ஒலியிலொரு
கானத்தின் தாளமது
மனதோடு உறவாட

ஊனத்தின் ஓலத்தில் அங்கு
உருவாகும் எதிர்பார்ப்பு
உணர்வோடு கலந்தாட

நீலத்தின் ஆழத்தை தன்
மூலத்தில் மறைத்திருக்கும்
சாரத்தை உரைத்திடுமோ ?

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment