[தமிழமுதம்] இது எப்படி இருக்கு !!!!!!!!!!!!
வராத கடனை வசூலிக்க அரவாணிகளை அனுப்பலாம்
பதிவு செய்த நாள் 12/26/2009 12:45:20 AM
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வங்கிகளின் வாராக் கடன் பல நூறு கோடிகளாக அதிகரித்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால் கடன் கணக்கை வங்கிகள் முடித்துக் கொண்டன. இந்நிலையில், வசூலிக்க முடியாமல் போன கடன்களை வசூலிக்க அரவாணிகளை நியமிக்கலாம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.
அரவாணிகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி, இன்சாப் நல அறக்கட்டளை தலைவர் முகம்மது அஸ்லாம் காகி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இதை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு விசாரித்தது. விசாரணையின்போது, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வசூலிக்க முடியாமல் போன கடன்களை வசூலிக்க அரவாணிகளை நியமிப்பது குறித்து வங்கிகள் பரிசீலிக்கலாம் என கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை அரவாணிகள் நல சங்கத்தின் தலைவர் அல்மாஸ் பாபி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ÔÔகடனை செலுத்தாமல் உள்ளவர்களை அவமானப்படுத்துவதற்கு தயாராகி வருகிறோம். அவர்களது வீடு அல்லது அலுவலகத்துக்கு முன்பு கைதட்டி, பாட்டு பாடி நடனம் ஆட உள்ளோம். அப்போது வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு அவர்களை வற்புறுத்துவோம். அப்படி முடியாவிட்டால் வளையல் அணிந்து கொண்டு எங்களுடன் வாருங்கள் என்று கூற உள்ளோம்ÕÕ என பாபி தெரிவித்தார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
sadeekali@gmail.com
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment