Re: [தமிழமுதம்] இந்தியர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழருக்கு நல்லது
நண்பர் மகிழ்நன்,
பெரியாரை இப்படி திரிக்கக்கூடாது நண்பரே...........பெரியார் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு அப்படி குறிப்பிட வில்லை.............இந்துமதத்திலிருந்து கொண்டு அதை விமர்சிக்கும் பொழுது.........இந்துதவவாதிகள் உங்களை போன்று அவருடைய பகுத்தறிவு பிரச்சாரத்தை திரித்து, திசை திருப்பிவிடுவார்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் அப்படி குறிப்பிடுகிறார்...
இந்தியாவை விட்டு வெளியேறினால்..............தமிழகம் சீரழிந்து போய்விடும் என்ற கற்பனையை நான் இல்லை.........இந்திய அதிகார வர்க்கமே மறுக்கிறது............
பாகிஸ்தான் இந்தியாவை விட்டு பிரிந்தபிறகு இன்னும் அங்கு நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவிலிருந்து
வங்காளதேசத்தை பிரித்து கொடுத்தது இந்திய வல்லாதிக்கம்தான்.......
பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்து தூதரகத்தை அனுமதித்து வைத்திருப்பதும் இந்தியாதான்..........
என்ன முரண் என்றால்.............இந்த இந்திய தேசியத்தை ஆதரிப்பவர்கள் பிரிவினைக்கு எதிராக பேசுவது.......
உலகின் அனைத்து இனங்களுக்கு தங்களுடைய தலைவிதியை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது.......................அதை தடுக்க.........அல்லது சமரசம் பேச யாருக்கு உரிமை இருக்கிறதோ, தகுதி இருக்கிறதோ இந்திய தேசியத்துக்கு அந்த தகுதி கிடையாது.....என்பதே என் தாழ்மையான கருத்து27 டிசம்பர், 2009 8:20 pm அன்று, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:
நண்பர்களே,
இஸ்லாம் மதத்தைப் போற்றிய பெரியாரை மதம் மாறச் சொன்ன போது அவர் "நான் இந்துவாகவே இருந்து, இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்," என்று கூறினார். அதுதான் பகுத்தறிவு.
இந்தியராக ஏற்று, இந்தியருடன் வாழ்ந்து, இந்தியருக்காக, இந்தியராய் இந்தியரின் அந்தரங்கக் குறைகளைக் காட்டுவதே சாலச் சிறந்தது. அந்நியராக இருந்து இந்தியரின் குறைகளைக் கூறினால் அது பலன் குன்றிப் போகலாம்.
இந்திய விடுதலைக் கீழ், இந்தியப் போக்குவரத்து, அஞ்சல், இராணுவப் பாதுகாப்பு, இந்திய நாணயம், இந்திய அரசியல் சட்டத்தின் படி வாழ்ந்து கொண்டு நான் இந்தியன் அல்லன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இது பிரிவினை உணர்ச்சி. இப்படி ஒருமைப்பாடு இல்லாமையால்தான் நமது தேசத்தில் ஏன் தமிழ் நாட்டில் பல இனப் பிரச்சனைகள் தீராமல் உள்ளன.
தமிழ்நாட்டில் பெரியார் நிழலில் முளைத்த திராவிடக் கட்சிகள் இத்தனை ஏன் உள்ளன ? தமிழருக்குள் ஏன் இத்தனை பிளவுகள் ? கடவுளை நம்பாத பகுத்தறிவு பொங்கும் திராவிடக் கட்சிகளுக்குள் ஏன் ஒற்றுமை இல்லை ?
முன்னேற்றம் அடைந்துள்ள ஜப்பானியரிடையே உள்ள தேசப் பற்றைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நாட்டில் பூகம்பம், சுனாமி, அடிக்கடி இடர் இழைத்தாலும் மக்கள் ஒன்று கூடி உழைத்துப் பிழைத்துக் கொள்கிறார். தேசப் பற்றில்லாத மக்கள் படிப்படியாகக் காட்டுமிராண்டிகளாக மாறி விடுவார்.
தமிழகத்தைத் தனியே பிரித்தால் ஆந்திர நாடுபோல், மதுரைத் தமிழர், கோவைத் த தமிழர், நெல்லைத் தமிழர், தஞ்சைத் தமிழர், சென்னைத் தமிழர் என்று தமிழ் நாடு சின்னா பின்னமாகச் சிதறிப் போகும். பெரியாரால் தமிழ், தெலுங்கு, கர்நாடகம், மலையாளம் சேர்ந்த திராவிட நாட்டையே பிரிக்க முடியவில்லை. யார் தமிழ் நாட்டைத் தனியே நாடாக ஆக்க முடியும் ? தமிழ் நாடு தனியே பிரிந்தால் அதுவும் பங்களா த்ஹேசம் போல் ஏழ்மை நாடாகி விடும்.
தமிழ் நாட்டில் தண்ணீர் வளம் குன்றி விட்டது. மின்சக்தி பற்றாக் குறை. நிதி வளம் பெருக தாதுக்கள் இல்லை. சென்னையில் மழை பெய்யா விட்டால் பிரளயம் உண்டாகும்.
இந்தியாவில் சமூகக் கேடான சத்தி என்னும் உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்கள் ராஜாராம் மோகன்ராய் & ஆங்கிலேயர் இருவர் (William Carey and William Wilberforce).
சி. ஜெயபாரதன், கனடா.
+++++++++++++++++2009/12/27 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
27 டிசம்பர், 2009 7:13 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:
2009/12/27 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி.ஆனால் சில தோழர்கள் கருத்துக்கு மாற்று கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாமல்
பண்பற்ற சொல்லில் தான் அதிக நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.என் இணைய வாழ்வில் மட்டுறுத்தலுக்கு முதன் முறையாக பணிச்சுமை என்பதை வருததத்துடன் தெரிவிக்கிறேன்
இணையத்தில் தமிழ் எழுதும் அளவுக்கு கற்றவர்கள் இப்படியும் எழுதுவார்களா என்னும் போது திகைப்பு ஏற்படுகிறது.(மகிழ்நனை சொல்லவில்லை)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி பொய்யாகட்டும்--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment