Friday, January 1, 2010

[அன்புடன்] கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி
========================

எண்ண அலைகளில்
மின்னும் உணர்வுகளில்
வண்ணக் கனவுகளை
மெல்லத் தவழ விட்டு
உன்னை மறைத்து வைத்துக்
கடவுள் செய்த குற்றமடி

மண்ணைத் தழுவுமுந்தன்
மணியான கருவிழிகள்
என்னைத் தீண்டி விட்டு
தன்னுள் புதைந்து கொண்ட
தந்திரத்தை உனக்களித்து
தவிக்க விட்ட அந்தக்
கடவுள் செய்த குற்றமடி

வெண்கலத்தில் மணிகள்
உருண்டோடும் ஒலிகளைப் போல்
கிண்கிணி நதமாய் பொன் சிரிப்பை
உதித்து என் மனதைச் சிதைத்த
பெண்ணுருவை கணத்தில் மறைத்து
சாகசம் புரிந்து விட்ட
கடவுள் செய்த குற்றமடி

அகலப் பரந்து விரிந்த இந்த
அகிலத்தின் மூலையில்
சுவாசித்துக் கொண்டிருந்த என்
சிந்தனையின் வலையிலே
சிங்காரப் பெண்ணவளைச்
சிக்க வைத்துப் பின் தப்ப விட்ட
கடவுள் செய்த குற்றமடி

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment