[அன்புடன்] Re: பெரியார் பார்வையில் பாரதியார் - 1
அன்பின் நண்பரே ஜெயபாரதன்,
சிந்திக்கத் தூண்டும் பதிவுகள்
அன்புடன்
சக்தி
On Jan 1, 6:53 pm, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> //// பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்பப்
> பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. ஆனால்
> பாரதியாரைத் தமிழ் நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை
> வளர்த்தவர் என்றும் தமிழன் தலை நிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும்
> கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்க
> வல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள், பாரதியாரைக் காட்டித் திராவிட
> உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை
> உண்டாக்கியிருக்கிறது. ////
>
> ++++++++++
>
> தமிழ்த் தந்தை பெரியார் தமிழைக் "காட்டுமிராண்டிகளின் பாஷை" என்று தூற்றியவர்.
> திருக்குறள், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற உன்னத தமிழ்க் காவியங்களை
> அந்தணர் காவியம் என்று இகழ்ந்தவர்.
>
> பாரதியார் தமிழை உன்னதப் படுத்திய தமிழ்க் கவிஞர் இல்லை என்றால் பெரியார் ஈ.வே.
> ராமசாமி நாயக்கரும் தமிழர் இல்லைதான். பாரதியாரைத் தமிழன் இல்லை என்று சொல்லும்
> எவனும் தமிழன் அல்லன்.
>
> ஆரியர் சுமார் 3000 ஆண்டுகட்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர். இஸ்லாமியர்
> சுமார் 800 ஆண்டுகட்கு முன்பு இந்தியாவுக்குள் குடிவாசிகள் ஆனவர். கிறித்துவர்
> 300 ஆண்டுகட்கு முன்பு இந்தியாவில் நிலை பெற்றவர்.
>
> தமிழ் நாட்டைத் தம் சொந்த நாடாக்கித் தமிழைத் தாய் மொழியாகப் பேசி தமிழை
> வளர்க்கும் அத்தனை பேரும் (ஆரியர், இஸ்லாமியர், கிறித்துவர்) "வந்தே மாதரம்"
> சொல்லா விட்டாலும் தமிழர். தமிழர், தமிழர்தான்.
> இந்தியாவில் தமிழகம் உட்பட ஆரியர், இஸ்லாமியர், கிறித்துவர் ஆகியோரிடையே
> வகுப்பு வாதம், ஜாதிப் பிளவு, இனப் பிரிவினையைத் தூண்டுபவர் மக்கள் துரோகிகள்
> என்று தூற்றப் படுவார்.
>
> சி. ஜெயபாரதன், கனடா
>
> ++++++++++++++++++++++++++++++++
> 2009/12/31 தமிழ் ஓவியா <oviyatham...@gmail.com>
>
>
>
>
>
> > (பாரதியார் பற்றி அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஒரு வித போதையான
> > பிம்பத்தை கட்டிவைத்திருக்கிறது. அதிலும் ப(வெ)ட்டி மன்றங்களில்
> > பாரதியாரைப் பற்றி பேசாத பேச்சாளர்கள் மிக மிகச் சொற்ப
> > அளவினரே.முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில
> > வலைப்பதிவர்கள் கூட அவரவர்கள் வலைப்பதிவில் பாரதியாரின் மேற்கோள்களை
> > பதிவிட்டு "பாரதியார் போதை" என்னும் மயக்கத்தில் தள்ளாடி வருகின்றனர்.
> > உண்மையில் பாரதியார் யார்? அவர் யாருக்காக?எதற்காக? என்ன நோக்கத்திற்காக
> > பாடினார் -செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஊன்றிப்
> > படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக
> > வெளிவரும்)
>
> > பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?
>
> > தமிழ்நாட்டில் தமிழனுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து தமிழ் மொழிப்பற்றின்
> > ஆர்வம் வெளியானது ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய நேரத்தில்
> > நிகழ்த்திய போராட்டத்தினாலாகும்.
>
> > தமிழ்பற்று மிகுந்து இன உணர்ச்சி தோன்றிபோது தான் தமிழ் மக்கள் தங்களின்
> > உண்மையான பகைவர் யார்? பகைமைக் கருவிகள் யாவை? எனத் தீவிரமாகச்
> > சிந்திக்கத் தலைப்பட்டனர். பார்ப்பனர் பார்னரல்லாதார் என்று கூறுவதே
> > இழிவு என உணர்ந்து தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப் பெயர் கொள்ள
> > விரும்பினார்கள். இவ்விருப்பம் இறுதியில் திராவிடர் என்று,
> > வரலாற்றிற்கும், இழிந்த நிலை மாறி மனித நிலையடைதற்கும் பொருத்தமாக,
> > யாரும் அசைக்க முடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சி தருங் கருவியாக அமைந்து
> > விட்டது. இந்நிலையையுணர்ந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இந்நிலை
> > நீடிக்குமேயானால் தங்களின் சோம்பேறி வாழ்வு சுடுகாடாகும் என்பதை நன்கு
> > உணர்ந்து, வழக்கம் போல சாம பேத தான தண்டம் என நான்கு வகை உபாயங்களையும்
> > கையாளுகின்றனர்.
>
> > தமிழ் மக்களின் தமிழுணர்ச்சியை ஆரியர்க்கு விரோதமாக வீறிட்டெழுந்த
> > விழுமிய உணர்ச்சி வெள்ளத்தை வேறு வகையில் திருப்பி
> > திராவிடர்களுக்குள்ளேயே பிளவையுண்டு பண்ண வேண்டும் என்ற திட்டமிட்டே,
> > தமிழர் - தெலுங்கர் போராட்டமாக மாற்றித் தவறுதலான வேறு வழியில் செல்ல
> > இந்நாட்டுப் பார்ப்பனர்கள் முயலுகின்றார்கள். இம்முயற்சிக்கு, இந்நாட்டு
> > வரலாற்றின் வாய்மைக் கிணங்கச் சில திராவிடர்களே தமிழர் தெலுங்கர்
> > போராட்டத்தைத் தொடங்குகின்றார்கள் என வெளியுலகிற்குக் காண்பிக்கின்றது
> > இந்நாட்டு ஆரியம். இவ்வுண்மையைத் தமிழ் நாட்டு அரசியல் போக்கைக்
> > கண்ணுற்று வருகின்றவர்கள் நன்கு உணரலாம்.
>
> > தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற
> > மற்றொரு வகை
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment