Friday, January 22, 2010

[அன்புடன்] Re: நூலின் பெயர் : அம்பேத்கர் , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
 
 
நூல்           ஆசிரியர் : திரு.என்.சொக்கன்

அறிஞர் அண்ணாவின் வாழ்கைக் கதை நிச்சியம் நம்மை ஒரு வெற்றியாளராக மாற்றி அமைக்கும் என்பது முற்றிலும் உண்மை. நூல் அறிவால் அகிலம் போற்றும் அறிஞர் ஆனவர் அண்ணா.

1909-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரணமான நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். அண்ணாத்துரை சுருக்கமாக அண்ணா என்று தொடங்கி,�எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது� எனும் வரிகள் பொறிக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா சமாதி வரை அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்பாக வந்துள்ளது நூல். நூலாசிரியர் திரு.என். சொக்கன் அறிஞர் அண்ணாவை, நன்கு உள்வாங்கி ஆய்ந்து, அறிந்து,தேர்ந்து நல்ல நூலாக வடித்துள்ளார்.

பகுத்தறிவுப் பாதையில் வெற்றிக்கொடி நாட்டிய அறிஞர் அண்ணா, குழந்தைப் பருவத்தில் நீண்ட ஜடை, காதில் கடுக்கண், நெற்றியில் நாமம் என்று அண்ணாவுக்குப் பெற்றோர் பெண் குழந்தையைப் போல அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள் என்ற தகவல் படிக்கச் சுவையாக இருந்தது. சிறுவயதில் அசைவம் சாப்பிட்டு பின்னர் பெரியவர் ஒருவர் உரை கேட்டு சைவத்திற்கு மாறியது புதிய தகவல்.

அரிச்சந்திரன் நாடகம் எழுதி, மாட்டுக் கொட்டகையில் அரங்கேற்றினார் அண்ணா. சாதாரண அண்ணா, அறிஞர் அண்ணாவாக மாறிய ரகசியம் படிப்பு, படிப்பு, படிப்பு. அவர், பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, வீட்டில் முறுக்கு,கடலை பட்சணம் வாங்கிவரும் காகிதங்களைக் கூட விட்டு வைக்க மாட்;டார். எந்நேரமும் அவருக்கு எதையாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் வாசிப்பை அவர் சுவாசிப்பாகக் கருதியதால், வாழ்வில் வென்றார், மக்கள் மனங்களில் நின்றார், நினைவாற்றல் மிக்கவர் அண்ணா.

பல தலைமுறைகளாக தமிழர்கள் அடங்கியே வாழ்கிறார்கள் என்று வருந்தியவர் பெரியார். தமிழர்களுக்குள் அடிமை உணர்வு தாழ்வு மனப்பான்மை அதிகமாகி விட்டது என்று நம்பிய அவர். அவர்களுக்குச் சுயமரியாதை எண்ணத்தை ஊட்டுவதற்காக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பெரியாரின் சீடராகத் தொடங்கி, முதல்வர் என்ற சிகரம் தொட்ட வரலாறு நூலில் மிக நுட்பமாகவும்,ரசிக்கும்படியும் பதிவு செய்துள்ளார். அறிஞர் அண்ணா, மாணவராக இருக்கும் போது மற்ற மாணவர்களைப் போல பாடப்புத்தகத்தில் உள்ளது போல அப்படியே எழுதாமல், படித்துப் புரிந்து கொண்டு தனது சொந்தநடையில் எழுதி அதிக மதிப்பெண்களையும், பாராட்டையும் பெற்றார். அண்ணாவின் கட்டுரையைப் பார்த்து ஆசிரியர் ஆச்சிரியம் அடைந்தார். பொய் சொல்லாதே? நீயே எழுதியதா? இந்தக் கட்டுரை, ஒரு மாணவனால் இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா ? என வியந்தார்.

மாணவப் பருவத்தில் தொடங்கிய எழுத்துப்பணி பன்முக ஆற்றலாளராக அவரை வளர்த்து எடுத்தது. எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் அண்ணா. மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். எதிரிகளும் பாராட்டும் வண்ணம் நேர்மையாக வாழ்ந்தவர். மிகச்சிறந்த பண்பாளர், ஒழுக்க நெறியாளர், தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியவர்.

இராஜாஜியின் ஆட்சியின் போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், அண்ணாவிற்கு 4 மாத சிறை தண்டனை, பெரியாருடன் சிறை செல்வதை பெருமையாக கருதினார். சமூக அக்கறையோடு பொது வாழ்க்கையில் ஈடுபட முன் வந்தது. தனக்குச் சரி என்று தோன்றுகிற ஒரு கருத்தை, யாருக்காவும், எக்காரணத்துக்காகவும், மாற்றிக் கொள்ள மாட்டார் அண்ணா. இப்படி பல தகவல்கள் அறிஞர் அண்ணா பற்றி நிறைய உள்ளது. காலத்தால் அழியாத பல பொன்மொழிகளை வழங்கியவர் அறிஞர் அண்ணா.

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக உதயமான கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம், சுருக்கமாக தி.மு.க என்று உருவானது. தந்தை பெரியார், மணியம்மையாரை மணம் முடித்ததும், கட்சி வாரிசு அரசியாகிறது, அது கூடாது என்று தான் தி.மு.க-வை ஆரம்பித்தார். ஆனால் தி.மு.க �விலும் வாரிசு அரசியல் வரும் என்பதை அறிஞர் அண்ணா அன்று உணரவில்லை. உணர்ந்திருந்தால் பெரியாரிடமே இருந்திருப்பார்.

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு மூன்றையும் எந்தச் சூழ்நிலையிலும் கைவிட்டு விடக் கூடாது என்;று தம்பிகளுக்கு கட்டளைகளை வகுத்தளித்தார் அண்ணா. ஆனால் இன்று திராவிடக் கட்சிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமா? கூடாதா? என்ற கருத்துக் கணிப்பு நடத்தி, தேர்தல் நடத்தி கொள்கை முடிவெடுத்தார் அறிஞர் அண்ணா. ஆனால் இன்று தேர்தலே பணம் கொடுத்து வாக்குப் பெறும் அவல நிலைக்கு வந்து விட்டது. தேர்தல் இன்று கேலிக்கூத்தாகி விட்டது.

தேர்தலில் ஆரம்பத்திற்கு தி.மு.கவிற்கு கிடைத்தது 15 தான் என்று கேலி செய்யப்பட்டார் அறிஞர் அண்ணா. 1967 தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெறக் காரணம் அறிஞர் அண்ணாவின் அயராத உழைப்பு. அரசியலில் நேர்மை, நாணயம், ஒழுக்கத்தோடு வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.

காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்திய பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இன்று வரை தனித்து நின்று காங்கிரசால் வெற்றி பெற முடியாத நிலை தொடருகின்றது என்றால் அது அறிஞர் அண்ணாவின் கடின உழைப்பு. அறிஞர் அண்ணா உருவத்தில் சற்று குள்ளமானவராக இருந்தாலும், உள்ளத்தால் உயர்ந்தவர். மாற்றுக்கருத்து உடையவர்களையும் மதிக்கும் பண்பாளர். அவருடைய எழுச்சி வரலாறு படித்ததும், நம் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுகிறார் அறிஞர் அண்ணா.www.kavimalar.com
www.tamilauthors.com
www.wtrfm.com

 
 



2010/1/22 RRavi Ravi <eraeravik@gmail.com>
நூலின் பெயர் : அம்பேத்கர் , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
 
 
நூல்           ஆசிரியர்  : திரு.ஆர்.முத்துக்குமார்

தனக்கு மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் எதிர்காலச் சமுதாயத்துக்குப் பெற்றுத் தருவதற்காகப் பேராடிய புரட்சியாளர் அம்பேத்கர் சிலிரிக்க வைக்கும் வாழ்கையைச் சரித்திரம் சிறிய கையடக்க நூலாக வந்துள்ளது. பிரோடிஜி நிறுவனம் பதிப்பித்து உள்ளது.

இந்த உலகில் பிறந்த மனிதர் யாவரும் சமம். எங்கே ஆதிக்க உணர்வு தலைதூக்கி பிறரை அடிமைப்படுத்தும் போது அங்கே புரட்சி வெடிக்கின்றது.மாமனிதர் அம்பேத்கர் மாணவராக இருந்த போது சந்தித்த சாதியக் கொடுமைகள் அவரது உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவர் அம்பேத்கர். அவரது இயற்பெயர் பீமாராவ். பள்ளிப்பருவத்தில் பள்ளியில் தண்ணீர் தாகம் எடுத்தால் நேரடியாக பானையிலிருந்து எடுத்து அருந்தத் தடை, யாராவது உயர் சாதி மாணவன் ஊற்றினால் கைகளில் ஏந்தி அருந்த வேண்டும். சிந்திய நீரைத்துடைத்து விட வேண்டும். இது போன்ற மனிதாபிமனம் இல்லாத தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்து உரிமை முழக்கம் செய்தார், உணர்ச்சி ஊட்டினார், தட்டிக் கேட்டார் தயங்கவில்லை.

அம்பேத்கர் வாழ்வில் அவரது பள்ளிப்பருவம் தொடங்கி, இந்தியாவின் சட்ட அமைச்சராக முத்திரை பதித்தது வரை நூலாசிரியர் ஆர்.முத்துக்குமார் சுவைபட விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புத நூல். நூலின் அட்டைப்பட வரிகளில் புரட்சியாளர் அம்பேத்கர் என்பத்றகு பதிலாக, புரட்சியாளர் அம்பேத்பர் என்று எழுத்துப்பிழை உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள்.

அவமானம், புறக்கணிப்பு,அவலம் எல்லாவற்றையும் மென்று விழுங்கினார் அம்பேத்கர். அவற்றைத் தன்னுடைய வளர்ச்சிக்கான உரமாகவும் மாற்றினார். நோக்கம் ஒன்று தான், தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரமாகப் பேச, எழுத, செயல்பட வேண்டும். முக்கியமாக சுவாசிக்க வேண்டும். இதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே செலவிட்ட போராளியின் தியாக வாழ்க்கையை நூலில் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

அம்பேத்கர் அப்பா வீட்டில் தம்ளரில் தான் தேநீர் குடிப்பார். ஆனால் தேநீர் கடையில் கொட்டங்கச்சியில் குடிப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். ஏன்? இந்த நிலை என்று தந்தையிடம் கேட்ட போது, அவர் பதில் சொல்லாமல், மௌனமாக இருந்தது கண்டு தர்மசங்கடமான கேள்வியை அப்பாவிடம் கேட்டு விட்டோம் என்று நினைத்து தீண்டாமைக் கொடுமையை வெறுத்தார்.

� பிராமணர்களின் சாலையில் நடந்து வரும் போது, கையில் ஒரு மணியை எடுத்து ஆட்டுவாங்க, சத்தம் கேட்டதும் நம்மளை மாதிரி ஆளுங்க, ஒரமாக ஒதுங்கி அவுங்க போறதுக்கு வழி விட்டுடணும், அப்படி செய்யலைன்னா நம்ம மேல இருக்கிற தீட்டு அவங்க மேல ஒட்டிக்குமாம்�. அண்ணன் சொல்வதைக் கேட்டு அம்பேத்கருக்கு பகுத்தறிவு வேலை செய்தது? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பின்னாளில் தீண்டாமைக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பி எழுச்சி ஊட்டினார்.

அம்பேத்கரின் திருமணத்திற்கு மண்டபம் தரப்படாததால் மீன் மார்க்கெட்டில் நடந்தது குடும்ப சூழ்நிலை காரணமாக பரோடாவிற்கு வேலைக்குச் சென்றது, தந்தை நோய்வாய்ப்பட்டதும் பம்பாய் திரும்பியது.1913 ஜீலை மூன்றாவது வாரம் படிக்க நியூயார்க் சென்றது, எப்போது நேரம் கிடைத்தாலும் படித்துக் கொண்டே இருப்பார், இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் மிக எளிமையான நடையில் எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் பதிவு செய்தது சிறப்பு.

ஊமைகளின் தலைவன் என்ற பெயரில் இதழ் தொடங்கினார்கள். பல்வேறு கட்டுரைகள் எழுதி புரட்சிக்கு வித்திட்டார். மாமனிதர் அம்பேத்கரும் ஊமைகளின் தலைவனாகி மக்களுக்காக இவர் பேசினார், எழுதினார், செயலாற்றினார்.

மாமனிதர் அம்பேத்கரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் இந்த உலகில் தோன்றியிருக்கா விட்டால், கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக உள்ளது. அன்று இருந்த மூடப்பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீண்டாமைக்கும் எதிராக உரக்கக் குரல் கொடுத்து சமதர்ம சழுதாயம் மலர பாடுபட்ட இவர்களின் உழைப்பு,என்றும் மறக்க முடியாதது.

அம்பேத்கர் பல போராட்டங்கள் நடத்தி எழுச்சியூட்டி இருக்கிறார். நாசிக்கில் இருக்கும் காலாராம் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு உயர்சாதிக்காரர்களின் எதிர்ப்பு கண்டு கொதித்து எழுத்தார். கர்நதியடிகளிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்தார்.

எந்தவொரு சமுதாயம் பள்ளிப்பருவத்தில் தீண்டாமை காட்டி ஒதுக்கியதோ, அந்த சழுதாயத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றினார்.1948 அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் அறிமுகம் செய்து பேசினார்.அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்த டாக்டர். இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்கள், அம்பேத்கருக்குப் பாராட்டு மழை பொழிந்தனர்.

ஆதிக்க வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் விடியல் விளைய கடைசி மூச்சு வரை உழைத்த ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாறு படித்து முடித்தவுடன் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் போராளி அம்பேத்கர்.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment