Re: [அன்புடன்] வாடையை ஆடையாய் உடுத்தி.....ருத்ரா
அன்பு ருத்ரா,
நீங்கள் எழுதிய கவிதையா இது?
பழந்தமிழ் பொழிகிறதே!
அன்புடன் புகாரி
2010/1/23 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>:
> வாடையை ஆடையாய் உடுத்தி
> =============================================ருத்ரா
>
>
>
> வேங்கை வீக்கள் விரி அயல் பரக்க
> கல்படு தெண்ணீர் வெள்ளருவி இழியும்.
> விசும்பு பிளந்தன்ன மழக்களிறு ஆர்ப்ப
> மூசு வண்டினம் முகப்படாம் போர்த்த
> கனைக்குரல் தினையை செவ்வலகு பிளந்து
> பசுங்கிளி கடிக்கும் பசிய வெற்பம்
> பழங்களும் வீழ்த்து வளம் சுரக்கும்மே.
> பொதிகை அடுக்கம் பொன் தமிழ் ஓசை
> தூஉய் உய்க்கும் நூலொலி நுவலும்
> அகத்தியன் ஐந்திணை ஓங்கல் படுக்கும்.
> பொருனை யாற்றுக் கரைக்கண் பூத்த
> எக்கர் ஞாழல் கடலினை ஒக்கும்.
> வெள்ளைசங்குகள் சிறகு விரித்தன்ன
> வெண்குருகுகள் வானம் உழப்பும்.
> இருங்கண் முதலை நெடுங்கண் பரப்பி
> அகழிகள் காட்டும் வெருவிய காட்சிகள்
> ஆற்றுத்திட்டின் பொறிபடர் பாறைகள்
> மலியும் கல்லிடைப்பேரூர்
> பனைக்காடு சிரிக்கும்
> ஓலைகளின் ஓசையில்
> பாய்விரித்து கிடந்தாள் பாதை வெறித்து.
> கதழ்பரி சலித்த என் காலொலி படுத்து
> விழியின் நீள்வரி புதையா நின்ற
> பொய்த்துயில் போர்த்தி நெகிழ்வளை வீழ
> என் மெய்கொண்டு தடவும் நினைவில் நெய்து
> நோற்று இருந்தாள் மன்னே.
> நெடுங்கொடு வாடை நடுக்கிய நள்ளில்
> என்னோடு நிழலாய் துஞ்ச
> இருள்வெண் காட்டில் இமைக்குள் இருந்தாள்
> வாடையை ஆடையாய் உடுத்தி
> வாலொளி நுதலின் கசியொளி தன்னில்
> என்னொடு தழீஇ நெருப்பில் இருந்தாள்
> புல்லிய மூச்சின் அளியள் தானே!
>
> ========================================================================ருத்ரா
>
>
>
>
>
>
> --
> அன்புடன் - உலகின் முதல்
> யுனித்தமிழ்க் குழுமம்
> buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment