Friday, January 1, 2010

Re: [அன்புடன்] எது கவிதை?

nandru miga nandru

On 1/1/10, இப்னு ஹம்துன் <fakhrudeen.h@gmail.com> wrote:
>
>
>
> எது கவிதை?
>
> கைத்தட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
> கருத்தனையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
> பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
> புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
> மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
> மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
> வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
> உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!
>
> சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
> சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
> முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
> முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
> பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
> பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
> எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
> இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.
>
> கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
> கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
> விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
> உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
> சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
> சுகங்காண இலக்கியத்தை செய்யும் கைகள்
> இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
> இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.
>
> சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
> சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
> சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதை தன்னை
> சூல்கொண்டு பிரசவிக்க தாய்மை வேண்டும்
> மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
> மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
> பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
> பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை.
>
> --
> H.FAKHRUDEEN
> பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
> +966 050 7891953
> www.ezuthovian.blogspot.com
> www.mypno.com
>
> இறைவா!
> என் நிலையையும்
> நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
> நீ நாடியிருந்தால்
> நிலையை உயர்த்து.
> ஒரு போதும்
> நினைப்பை உயர்த்தி விடாதே!
>
> --
> அன்புடன் - உலகின் முதல்
> யுனித்தமிழ்க் குழுமம்
> buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment