Sunday, December 27, 2009

[அன்புடன்] Re: ராஜாங்க அடிமை

அன்பின் பிச்சுமணி,

கருத்துக்கனமிக்க அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

On Dec 27, 1:21 am, பிச்சுமணி <v.pitchum...@gmail.com> wrote:
> ராஜாங்க அடிமை
>
> ஒழிக்கப்பட்ட  ஜமின்தாரர்களின்
> சிம்மாசனத்தில் அரிதாரம் பூசிய
> பிரபுவாக அவன் அமர்ந்திருந்தான்
>
> சிறப்பாக அழைத்தான்
> ஓட்டைரதமும் குருட்டு குதிரைகள்தான்
> என் தாமதத்துக்கு காரணம் தெரிந்தும்
> அவனது வெள்ளி திருவோட்டில்
> தங்க திருவோட்டின் உறவால் ஏற்பட்ட
> தங்க மூலாம் பூச்சு ஒளியில்
> புத்தன் மறுத்த பிச்சையினை
> என் அலுமனிய திருவோட்டில்
> சுமக்க  மனமில்லாவிட்டாலும்
> கனமாய் எரிந்தான்
>
> பிச்சையினை திரும்ப தர
> திருவோட்டை திருப்ப எத்தனித்தேன்
> விரல்கள் என் வேர்களாகி தடுத்தன
> திருவோடு உடைந்துவிடுமென
>
> செரிக்க நினைத்தேன்
> கல்லாய்  அடிமனதில் கனத்தது
> யார் மீதும் இறக்கிவிடக்கூடாதென
> கவனமாக நடந்தேன்
> சீடர்கள் தப்பினார்கள்
> மேய்ச்சலில் அடிவாங்கிய தாய் பசுவின்
> துன்பம் தெரியா கன்று அடிமடியை முட்டியது
> வாயில் ஒட்டிஇருந்த பிச்சை சோற்றுபருக்கை
> விழுந்து கன்றின் கால்கள் முறிந்தன
>
> செரிமான கஷ்டத்தில் நானிருக்கையில்
> பிச்சைகாரன் பிச்சை கேட்டான்
> என்னிடமே பிச்சையா போ போ என்றேன்
> இல்லை என்று சொல் ஏன் விரட்டுகிறாய்
> ராஜாங்க அடிமை என்ற திமிரென
> முணுமுணுத்தபடி அவன் கைவிசி நடந்து சென்றான்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment