Re: [அன்புடன்] நண்பனுக்கோர் மடல்
நல்லா இருக்கு சக்தி
2009/12/28 Sakthi Sakthithasan <sakthisakthithasan@googlemail.com>:
>
>
> நண்பனுக்கோர் மடல்
>
> அன்பு நண்பனே !
>
> ஆண்டொன்று ஓடி விட்டது
>
> ஆயிரம் நிகழ்ந்து விட்டது
>
> ஆற்றாமையின் உச்சத்தில்
>
> அல்லாடும் மக்கள் கூட்டம்
>
> கனவுகளைத் தாங்கிக் கொண்டு
>
> நினைவுகளைப் புடம் போட்டு
>
> கடமைவழி சென்றவர்கள்
>
> கண்ணீரின் வெள்ளத்தில்
>
> கடந்து வந்தது கற்தரை
>
> நடந்து கொண்டிருப்பது முட்தரை
>
> வந்திடுமா ? புற்தரை என ஏங்கிக் கொண்டே
>
> விரைந்தோடும் சொந்தங்கள்
>
> அவர்களின் வானத்தில்
>
> தினமும் அமாவாசை
>
> அவர்களின் நாட்களுக்கு ஏன் தானோ
>
> இரவுகள் விடிவதில்லை
>
> சொல்லச் சொல்ல வலிக்குதடா
>
> செல்லச் செல்ல களைக்குதடா
>
> பயணங்கள் முடியாமல்
>
> பாதையும் தெரியாமல்
>
> பரிதவிக்கும் சொந்தங்கள்
>
> பார்ப்பாரோ வசந்தங்கள் ?
>
> அரசியலோர் விளையாட்டாய்
>
> அன்றாடும் சூதாடும்
>
> பாண்டவரும், கெளரவரும்
>
> பாவம் இவர்கள் மானிடர்கள்
>
> கருமையான இரவொன்றில்
>
> கண்களைக் கட்டிவிட்டு
>
> வாசலைத் தேடவிட்டு
>
> வேடிக்கை பார்க்கும் கூட்டம்
>
> உள்ளத்தின் உணர்ச்சிகள் எல்லாம்
>
> வெள்ளமாய் பெருக்கெடுத்து
>
> கண்ணீராய் ஓடுதடா
>
> அதோ! அங்கே தெரியும்
>
> புதியதோர் வருடமாவது
>
> கிடைக்குமா வாழ்வு
>
> களைத்து விட்ட மக்களுக்கு ?
>
> அன்புடன்
>
> சக்தி
>
>
> --
> அன்புடன் - உலகின் முதல்
> யுனித்தமிழ்க் குழுமம்
> buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment