[அன்புடன்] Re: மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி
அன்பின் ரவி,
ஏக்கங்கள் கூட இத்தனை அழகாக வர்ண்ணிக்கப்பட முடியுமா? புத்தாண்ண்டின்
வேண்டுகோள்களாகப் பரிண்ணமிக்கும் அற்புத கவிதை.
அன்புடன்
சக்தி
On Jan 1, 8:44 am, RRavi Ravi <eraera...@gmail.com> wrote:
> மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி
>
> ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
> இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்
>
> பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
> பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்
>
> அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
> அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்
>
> உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
> உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்
>
> ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
> ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
>
> பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
> பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்
>
> சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
> சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்
>
> சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
> சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்
>
> எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
> இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்
>
> மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
> மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்
>
> ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
> இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்
>
> பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
> ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment