Friday, January 1, 2010

[அன்புடன்] Re: எது கவிதை?

அன்பின் இப்னு ஹம்தூன்,

அருமையான கவிதை. அழகான விளக்கம். அற்புதமான படைப்பு

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

On Jan 1, 3:24 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> >  சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
> >   சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
> > முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
> >   முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
> > பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
> >   பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
> > எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
> >   இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.
>
> > நல்ல தெளிவு. அதையும் எண்சீரிலேயே சொன்னது அழகு.
> >  கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
> >   கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
> > விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
> >   உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
> > சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
> >    சுகங்காண இலக்கியத்தை செய்யும் கைகள்
> > இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
> >    இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.
>
> அட எதுதான் கவிதை என்று சொல்லப் போகிறீர்கள் என்று கேட்கத் தூண்டும் அருமையான
> வரிகள்.
>
> >  சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
> >   சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
>
> > நம்பிக்கை தரவேண்டும் - ஆமாம்!
> >  சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதை தன்னை
> >    சூல்கொண்டு பிரசவிக்க தாய்மை வேண்டும்
>
> > வெறுமனே உட்கார்ந்து கோப்பதல்ல கவிதை. அது தானே எழுந்து வந்து எழுப்பவேண்டும்
>
> - ஆமாம்!
>
> >  மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
> >    மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
>
> > ஒரு தனிச் சிறப்பும் இல்லாமல் ஒரு கவிதையும் இல்லை - ஆமாம்
> >  பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
> >    பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை.
>
> > ம்ம் நல்ல கருத்துத்தான். நல்ல கவிதை இப்னு
>
> அன்புடன் புகாரி
>
>
>
>
>
>
>
> > --
> > H.FAKHRUDEEN
> > பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
> > +966 050 7891953
> >www.ezuthovian.blogspot.com
> >www.mypno.com
>
> > இறைவா!
> > என் நிலையையும்
> > நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
> > நீ நாடியிருந்தால்
> > நிலையை உயர்த்து.
> > ஒரு போதும்
> > நினைப்பை உயர்த்தி விடாதே!
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasantham-unsubscribe@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
> அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://pogathe.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://groups.google.com/group/anbudan- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment