Friday, January 1, 2010

[அன்புடன்] ஒலியில்லாத ஓலங்கள் !

ஒலியில்லாத ஓலங்கள் !
========================

அன்னையின் தாலாட்டும்
தந்தையின் சீராட்டும்
கண்ணீரின் வடிவத்தில்
காலமென்னும் புத்தகத்தில்

ஒரு நேரச் சோற்றுக்கு
ஒரு வழியும் அறியாமல்
வாழ்க்கையின் வரம்பினில்
வடிந்து விட்ட நேரங்கள்

உழைப்பு ஒன்றே மூச்சாக
உணர்வுகளின் இருளினிலே
உருண்டோடிடும் உயிர்கள் நாம்
உணர்ந்திடுவோர் யாருண்டு

அடுக்கடுக்காய் வருடங்கள்
அவசரமாய் வந்து போகும்
அடுத்தநேரம் உணவு மட்டும்
கிடைக்குமிடம் அறிந்திடா நிலை

வெறுமையான கலங்கள் மோதும்
ஒலியின் மத்தியிலே நமது
ஓலங்களின் ஒலிகள் மட்டும்
கேட்பது சாத்தியமா ?

அன்புடன்
சக்தி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment