Monday, December 28, 2009

[தமிழமுதம்] உண்மைக் கதை : கோவாவில் வெள்ளைக்காரி முனிம்மா

National Geography சானலில் கண்ட உண்மைக்கதை..[http://channel.nationalgeographic.com/series/locked-up-abroad]

நான் பார்க்கும் சில சீரியல்களில் 'Locked up abroad.'ம் ஒன்று.. சாதாரண மக்கள் சிறுதொகைக்கு ஆசைப்பட்டு
வெளிநாட்டில் போதைபொருள் கடத்தி சிக்கியவர்களைப் பற்றிய உண்மைக் கதை.. இத்தனை நாள் மெக்ஸிகோ, அமெரிக்கா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் சிக்கியவர்களின் கதையை ஒளிபரப்பினர் .. கடந்தவாரம் இந்தியாவில் சிக்கிய ஒரு இங்கிலாந்துகாரியை பற்றிய கதை.


கோவாவில் வெள்ளைக்காரி முனிம்மா

வாயில் நுழையாத ஏதோ வெள்ளைக்காரி பெயர் நம் கதைக்காக முனிம்மா.

நல்ல மத்திய தர குடும்பத்தை சேர்ந்த லண்டனில் இருக்கும் வெள்ளைக்காரி முனிம்மா ஏதோ பிரச்சனையில் கணவனை பிரிகிறார்..  சரி சில நாள் ஏதாவது வெளிநாட்டில் போய் இருந்தால் டென்சன் தீரும்னு இந்தியா வருகிறார்.

இந்தியாவில் பல ஊர்களையும் சுற்றி வருகிறார்.. தெருவெங்கும் மக்கள், ரோட்டிலும் மாடுகள்.. தொந்தரவில்லாத அமைதியான வாழ்க்கை.. பிடித்து விட.. பல வெள்ளையர்கள் வாழும் கோவாவில் சில மாதங்கள் தங்க தீர்மானிக்கிறார்.

பார்டி, பார், பீச் வீடு , புதிய நண்பர்கள், தம், கொஞ்சம்  கஞ்சா, என்று 9 மாதங்கள் கழிகின்றன..  கொண்டுவந்த சில ஆயிரம் பவுண்டும் காலியாக.. என்ன செய்வதென தெரியாமல் வெள்ளைக்கார நண்பன் மேத்யுவிடம்  புலம்புகிறார்.

இதென்ன சப்ப மேட்டரு.. உனக்கு இஷ்டம் இருந்தா சொல்லு.. ஐரோப்பாவில் ஒரு நண்பனை அறிமுகம்படுத்துறேன்.. அவனுக்கு கொஞ்ம் போல 1கிலோ கஞ்சா அனுப்பினா 5000 பவுண்ட் கிடைக்கும்.
நல்ல நம்பகமான ஆளு.. நானு அதான் செய்றேனு சொல்கிறான்.

இதைக்கேட்டு பயந்து போன முனிம்மா.. அடப்பாவி பாத்தா ஜண்டில்மேன் மாதிரி இருக்கே.. இதான் உனக்கு பொழப்பானு நினைச்சிட்டு.. இதெல்லாம் வேண்டாம் என ஒதுங்குகிறாள்.


சில நாட்கள் செல்கின்றன.. கொண்டு வந்த பணம் முழுவதும் செலவழிந்துபோக  நீண்ட யோசனைக்குப் பிறகு
மேத்யுவிடம் அவன் நண்பன் மிஸ்டர் Xன் தொடர்பு எண்ணை பெற்று.. மிஸ்டர் Xடமிருந்து இந்திய தொடர்பு விபரங்களை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குறாள்.

சரக்கு வாங்க தேவையான சில ஆயிரம் ரூபாய்களை புரட்டி டெல்லிக்கு இரயில் ஏறுகிறாள், டெல்லியில் தரமான ஓட்டலில் தங்குறாள்.  மிஸ்டர் X கொடுத்த இந்திய தொடர்புடன் தொலைபேசி அவன் இடம் தேடி ஒரு சேரி மார்கெட்டுக்கு சென்று சில கிலோகிராம் சரக்குகளை பயந்து , அரண்டு போய்  வாங்கி வருகிறாள். இந்த சரக்குகளை யுரோப் மிஸ்டர் X க்கு அனுப்ப.. மார்கெட்டுக்கு போய் ஒரு அச்சு பிள்ளையார் வாங்கி வந்து சரக்குகளை லேகியம் போல் உருட்டி பிள்ளையாருக்குள் அடைத்து பேக்கிங் செய்து ஒரு பிரபலமான கொரியர் ஆபீஸூக்கு எடுத்து செல்கிறாள்.

கொரியர் ஆபீஸீல் சில கேள்விகளை மட்டுமே கேட்டு அவளிடமிருந்து பிள்ளையார் பெட்டியை பெற்றுகொள்கின்றனர். சரக்கை அனுப்பிய சந்தோசத்தில் கோவா திரும்புகிறாள் முனிம்மா.

3 நாட்களுக்கு பிறகு மிஸ்டர் க்கு போன் போடுகிறாள்.. சரக்கு பத்திரமாக தன்னிடம் வந்து சேர்ந்ததாகவும் 5000பவுண்ட் களை வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பியுள்ளதாகவும் அதன் எண்ணையும் கொடுக்கிறான். [1/2 நாள் வேலைக்கு 5000 பவுண்ட் கொஞ்சம் அதிகம் தான்..]

5000பவுண்ட் கிடைத்த சந்தோசத்தில் இந்திய ரூபாய்களை தண்ணீராக செலவழிக்கிறாள் முனிம்மா பார்டி, தண்ணி, கஞ்சா வென 7மாதங்களின் முடிவில் கையில் நயா பையா இல்லாதது தெரியவருகிறது..

மறுபடியும் சரக்கு அனுப்ப முடிவு செய்கிறாள்.. இந்த முறை சற்று தைரியத்துடன் மிஸ்டர் X டுன் பேசி..டெல்லி சென்று சரக்குகளை பெற்று பிள்ளையார் வாங்கி தொப்பையில் சரக்கை நிரப்பி.. அதே கொரியர் கம்பனியில் அனுப்புகிறாள்.
3நாட்களுக்கு பிறகு 5000பவுண்டுகள் கையில்.. மறுபடி 6 மாதம் போதை உலகில் செல்கிறது..  கையில் பைசா காலியானவுடன் ஞானம் பிறக்கிறது.. சரி ரெஸ்ட் எடுத்தது போதும் கடைசியாக ஒரு முறை சரக்கை அனுப்பிவிட்டு  நாம ஊர் போய் சேரலாம்னு முடிவு செய்கிறாள். 

மறுபடியும் டெல்லி பயணம், சரக்கு கைமாறி.. பிள்ளையார் வயிற்றில் அடைக்கலம் புகுகிறது. இந்த முறை வேற கொரியரில் அனுப்பலாம்னு வேற ஒரு ப்ராஞ்சிக்கு சென்று பிள்ளையாரை அனுப்ப வேண்டும் என்கிறாள்..

"உங்க பாஸ்போர்டை பாக்கலாமா ?" என்று கேட்கிறார் கொரியர் சிப்பந்தி

அடடா அவசரத்தில் பாஸ்போர்ட் கொண்டு வரல..  ஹோட்டலில் இருப்பதாக பொய் கூறுகிறாள்..

அடுத்த முறை பாஸ்போர்ட் இல்லாமல் அனுப்ப முடியாது என்று இந்த முறை பெற்று கொள்கிறார் கொரியர் சர்வீஸ்.

3 நாட்களுக்கு பிறகு மிஸ்டர் X போன் போடுகிறாள்.. சரக்கு வந்து சேரலைனு சொல்கிறான் மிஸ்டர் X.  ஏதோ ஒரு பயத்துடன் டெல்லி கொரியர் சர்வீசூக்கு போன்
போடுகிறாள்..

சாரி மேடம் நீங்க கொடுத்த அட்ரஸ் சரியா புரியல.. நீங்க FAX நம்பர் கொடுங்க நான் ஒரு ஃபார்ம் அனுப்புறேன் நீங்க அட்ரஸை சரியா எழுதி அனுப்புங்கன்னு சொல்கிறான்.. முனிம்மாவும் நீண்ட யோசனைக்கு பிறகு STD பூத்தின் FAX எண் தருகிறாள். அன்று மாலை STDல் யாரும் இல்லாத நேரமாக சென்று தன் பெயருக்கு ஏதாவது FAX வந்துள்ளதா என்று கேட்கிறாள். STD பூத் பையனும் வந்திருக்குனு எடுத்து கொடுக்கிறான்.. கஸ்டம்ஸ் போலீஸ் வந்து முனிம்மை வாரிக்கொண்டு போகின்றனர்.

பல மாதங்கள் வழக்கு இழுத்தடித்த பிறகு முனிமாவுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கிறது..  5 வரும் 3 மாதங்களுக்கு பிறகு வெளியே வருகிறாள் முனிம்மா.


...........................................

கோவா பக்கம் போகிறவர்கள் ஜாக்கிரதை..





~காமேஷ்~

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment