Monday, December 28, 2009

[அன்புடன்] Re: ராஜாங்க அடிமை

நன்றி சக்தி அய்யா. இந்தாண்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு நூல்
வெளியிடுகிறீர்களா. தமிழகம் வருவதாக ஏதாவது எற்பாடு உண்டா
பிச்சுமணி.

On 27 Dec, 23:36, Sakthi sakthithasan
<sakthisakthitha...@googlemail.com> wrote:
> அன்பின் பிச்சுமணி,
>
> கருத்துக்கனமிக்க அருமையான கவிதை
>
> வாழ்த்துக்கள்
>
> அன்புடன்
> சக்தி
>
> On Dec 27, 1:21 am, பிச்சுமணி <v.pitchum...@gmail.com> wrote:
>
> > ராஜாங்க அடிமை
>
> > ஒழிக்கப்பட்ட ஜமின்தாரர்களின்
> > சிம்மாசனத்தில் அரிதாரம் பூசிய
> > பிரபுவாக அவன் அமர்ந்திருந்தான்
>
> > சிறப்பாக அழைத்தான்
> > ஓட்டைரதமும் குருட்டு குதிரைகள்தான்
> > என் தாமதத்துக்கு காரணம் தெரிந்தும்
> > அவனது வெள்ளி திருவோட்டில்
> > தங்க திருவோட்டின் உறவால் ஏற்பட்ட
> > தங்க மூலாம் பூச்சு ஒளியில்
> > புத்தன் மறுத்த பிச்சையினை
> > என் அலுமனிய திருவோட்டில்
> > சுமக்க மனமில்லாவிட்டாலும்
> > கனமாய் எரிந்தான்
>
> > பிச்சையினை திரும்ப தர
> > திருவோட்டை திருப்ப எத்தனித்தேன்
> > விரல்கள் என் வேர்களாகி தடுத்தன
> > திருவோடு உடைந்துவிடுமென
>
> > செரிக்க நினைத்தேன்
> > கல்லாய் அடிமனதில் கனத்தது
> > யார் மீதும் இறக்கிவிடக்கூடாதென
> > கவனமாக நடந்தேன்
> > சீடர்கள் தப்பினார்கள்
> > மேய்ச்சலில் அடிவாங்கிய தாய் பசுவின்
> > துன்பம் தெரியா கன்று அடிமடியை முட்டியது
> > வாயில் ஒட்டிஇருந்த பிச்சை சோற்றுபருக்கை
> > விழுந்து கன்றின் கால்கள் முறிந்தன
>
> > செரிமான கஷ்டத்தில் நானிருக்கையில்
> > பிச்சைகாரன் பிச்சை கேட்டான்
> > என்னிடமே பிச்சையா போ போ என்றேன்
> > இல்லை என்று சொல் ஏன் விரட்டுகிறாய்
> > ராஜாங்க அடிமை என்ற திமிரென
> > முணுமுணுத்தபடி அவன் கைவிசி நடந்து சென்றான்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment