[தமிழமுதம்] 120,000 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைக்க தயாராகும் ஆஸ்தி...

50 வருடங்களுக்கு முன் அமெரிக்கரான ஜோ கிட்டிங்கர் 102,800 அடி (31 கிலோ மீற்றர்) உயரத்திலிருந்து பலூனை பயன்படுத்தி குதித்து நிறைவேற்றிய சாதனையை இவர் முறியடிக்கவுள்ளார். இந்தச் சாதனையை முறியடிக்க பல தசாப்த காலமாக பலரும் முயன்று தோற்றதுடன் சிலர் அந்தச் சாதனை முயற்சியில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
புவியீர்ப்பற்ற நிலையில் போதிய அழுத்தத்தை வழங்கக் கூடிய விசேட கவச ஆடையை அணிந்தவாறு ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் பீலிக்ஸ் குதிக்கவுள்ளார்.
"நான் என்னால் முயன்ற அளவு, வரையறைகளை உடைத்து சாதனை படைக்க விரும்புகிறேன்'' என பீலிக்ஸ் கூறினார்.
அத்துடன் அவர் இந்தச் சாதனை முயற்சியின் போது குதித்து 5 நிமிட நேரத்தின் பிற்பாடு பூமியை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீலிக்ஸ் இந்தச் சாதனையை நிறைவேற்றும் பட்சத்தில், இயந்திரத்தின் துணையின்றி ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் குதித்த முதலாவது நபர் என்ற பெருமையை பீலிக்ஸ் பெறுவார்.
2003 ஆம் ஆண்டில் இறக்கை பொருத்தப்பட்ட ஆடையை அணிந்தபடி ஆங்கிலக் கால்வாயில் குதித்து பீலிக்ஸ் உலக சாதனை படைத்திருந்தார்.
அத்துடன் அவர் மலேசிய கோலாலம்பூரிலுள்ள பெட்ரோனஸ் கோபுரத்திலிருந்து குதித்து உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்தவர் என்ற உலக சாதனையை நிறைவேற்றியிருந்தார்.
எனினும், அவரது உலக சாதனையை நாஸர் அல் நியாடி மற்றும் ஓமர் அல் ஹெகேலன் ஆகியோர் கடந்த 8 ஆம் திகதி துபாயிலுள்ள உலகின் அதி உயரமான கட்டிடமான புரூஜ் கஹ்லிபாவிலிருந்து குதித்து முறியடித்திருந்தனர்.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment